ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Monday, December 06, 2004

சிம்புவின் ஆண்குறியை அறுக்கவேண்டும்.

நான் உசாவிய அளவில் `மன்மதன்' திரைப்படத்திற்கு எந்த எதிர்ப்பும், ஒரு முனகல் அளவில் கூட தமிழ் கூறும் நல்லுலகில் இருந்து வெளிபட்டதாக தெரியவில்லை. படம், முதலிடத்தில், நன்றாய் போவதாய் வேறு தகவல்கள், தமிழின் சுரணையற்ற பெட்டி பூர்ஷ்வாக்கள் கூடும் சினிமா ஃபோரம்களில் படத்தை பற்றி நல்லதாய் வேறு எழுதியிருப்பதை கண்டு, தமிழ் சூழல் இவ்வளவு வக்ரமாகவா இருக்கும் என்று தலையிலடித்து கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்ததற்காக மிகவும் வெட்கபடுகிறேன்.

ஆபாச படங்களை எதிர்த்து போர்கொடி உயர்த்தும் தமிழக பெண் அமைப்புகள், இந்த படம் குறித்து முனகும் அளவிற்கு கூட சுரணை இல்லாமல் இருப்பதை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை. இப்படி ஒரு படம் நன்றாய் ஓடுவதை பார்த்து அவர்கள் கொதித்து எழுந்திருக்க வேண்டும். ஒருவேளை `நடத்தை கெட்ட' பெண்கள் கொல்லபடுவதை எதிர்ப்பதில் தர்ம சங்கடம் ஏதாவது இருக்குமா என்று தெரியவில்லை. அதற்கான எதிர்ப்பு தேவையில்லை என்று நினைக்கிறார்களோ என்று புரியவில்லை. ஒரு குறிப்பிட்ட ஜாதியை, மதத்தை இழிவாக குறிப்பிட்டால் எத்தகைய எதிர்ப்பு இங்கே தெருபோராட்டமாக வெடித்திருக்கும் என்று யோசிக்க வேண்டும். `சிம்புவின் ஆண் குறியை அறுப்போம்' என்று தெருவில் எழுதி போட்டிருக்க வேண்டாமா? எனக்கு தெரிந்து அப்படி சொல்லகூடிய ஒரே பெண்ணும் விடுமுறையில் சென்றுள்ள தருணத்தில் ஆணாகிய நான், என் சமுதாயம் குறித்த மிகுந்த சுயபச்சாதாபத்துடன் இந்த கோஷத்தை முன்வைக்கிறேன்.

ஆண்குறியை அறுக்க வேண்டும் என்று கோஷிப்பதினால், வன்முறையாக இதை நினைக்க வேண்டாம். உதாரணமாய் `கெட்ட' பெண்களை கொல்லவேண்டும் என்று கருத்தை, ஒரு தர்மமமாய், படத்தில் வலியுறுத்தி பிரச்சாரம் செய்யும் சிம்பு, நடைமுறை வாழ்வில் அதை செய்ய போவதில்லை. இந்த படம் மூலம் உந்துதல் அடைந்து யாரவது செய்தால் உண்டு. அதை போல இந்த கோஷத்தை, ஒரு கோஷமாக மட்டும் முன் வைக்கிறேன். இந்த சிம்பு ஒரே ஒரு பெண்ணை மட்டும் தொட்டு வாழபோவதில்லை. இந்த படத்திலேயே அவர் பல பெண்களுடன் உல்லாசிக்கிறார். இதன் காரணமாய் படத்தின் நியாயத்தை அப்படியே எடுத்து கொண்டு, ஒரு கோஷமாக இதை சொல்கிறேன். இதனால் உந்துதல் அடைந்து யாராவது-சிம்புவின் மனைவி உட்பட-இதை நிகழ்த்தி காட்டினால் நான் பொறுப்பல்ல.

சிம்புவின் ஆண்குறியை அறுப்போம்!

யாரேனும் சிம்புவின் மின்னஞ்சல் முகவரியை அல்லது அவருக்கு இதை தெரியபடுத்தும் வழியையோ கீழே பின்னூட்டத்தில் தெரிவித்தால் நன்றி.

Post a Comment

26 Comments:

Anonymous Anonymous said...

http://groups.yahoo.com/group/Maraththadi/message/22061 ;-)

12/06/2004 4:09 PM  
Blogger ROSAVASANTH said...

இதை இப்போதுதான் பார்தேன். உண்மையில் நான் எழுதியதை மறுத்து படம் குறித்த ஒரு விமர்சனத்திற்கு உதாரணமாக இந்த சுட்டியை தந்திருப்பதாக நினைத்து போய் பார்த்தேன்.

பாஸ்டர்ட்ஸ்! இந்த படம் யாருக்காவது பிடித்திருந்தால் அதை புரிந்துகொள்ள முடியும். எதிர்ப்பு தெரிவிக்க ஒற்றை ஆள்கூட இல்லாத இந்த சூழலை எப்படி புரிந்து கொள்வது? இத்த்னைக்கும் இதில் பலர் தமிழ் நாட்டை விட்டு மேற்குலகில் வந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

12/06/2004 4:21 PM  
Blogger பினாத்தல் சுரேஷ் said...

வழி மொழிகிறேன்.

அத்துடனே தன் வக்கிர புத்தியை நியாயப்படுத்தும் S J சூர்யாவுக்கும் இதே தண்டனையை பரிந்துரைக்கிறேன்

12/06/2004 5:01 PM  
Anonymous Anonymous said...

அதே மாதிரி 'பாய்ஸ்' படம் கொடுத்த ஷங்கருக்கும்..

12/06/2004 5:22 PM  
Blogger kirukan said...

நீங்கள் சொல்வது மாதிரி செய்தால் அவ்வளவுதான். சினிமாக்காரர்களில் 99% பேருக்கு அப்புறம் அது இருக்காது.

12/06/2004 7:14 PM  
Anonymous Anonymous said...

சினிமாகாரர்கள் என்ன, பாதி ஆண்களுக்கே 'அது' இருக்காது.

12/06/2004 11:27 PM  
Blogger Thangamani said...

பாதி என்ன பெரும்பாலான ஆண்களுக்கு அது இல்லாததால் தான் அந்த இடத்தில் தங்களது மூளையை வைத்து இப்படி படம் எடுத்து, எழுதி, ரசித்து எப்படியோ சமாளிக்கிறார்கள் வசந்த்.

12/07/2004 5:56 AM  
Blogger அனாதை ஆனந்தன் said...

என்னா இது குறி அறுப்பு வேலை? கொட்டைய நசுக்கிட்டா போறாது? எல்லாம் சரிதான். சூர்ப்பனகை முலையை அறுத்த லக்ஷ்மணனின்
சூனாவை என்னா பன்றது? இல்ல அப்பா சந்தேகித்த அம்மா தலையை வெட்டுன பரசுராமன் சூனாவைத்தான் என்னா பன்றது? அங்கைருந்து
ஆரம்பிச்சால்ல சரியாயிருக்கும்.

ஆமா, மன்மதன்ன்னு கேள்விப்படற கதையைக் கேட்டா சிம்பு -> ஐஸ்வர்யா -> தனுஸ் கதை மாறில்லா இருக்கு? ம்ம்ம்....

அனாதை.

12/07/2004 11:39 AM  
Blogger ROSAVASANTH said...

கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி. தங்கமணி, அநாமதேய நண்பர், கிருக்கன் சொன்னதுபோல் ஆணாதிக்கவாதிகளின் ஆண்குறிகளை அறுக்க தொடங்கினால், என்னை பொறுத்தவரை யாருக்குமே(என்னையும் சேர்த்து) மிஞ்சாது. அது குறித்து தருணமும், வசதியும் வரும்போது பெண்கள் பேசட்டும். இது இப்படி ஒரு அயோக்கியத்தனமான கருத்தை பிரசாரம் செய்யும் படத்திற்கு எந்த எதிர்பும் வராததால் எழுதியது. மற்றபடி பழைய பதிவில் சொன்னது போல் சினிமாவை விட, சமுதாயத்திற்குதான் இனிமா கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

மற்றபடி ஜனரஞ்சக சினிமாவிற்கு நான் எந்தவிதத்திலும் எதிரி அல்ல. அதற்கு மிகவும் ஆதரவானவன். இங்கே அப்படிபட்ட குரல்கள் ஒலித்ததனல் சொல்லவேண்டியுள்ளது. இது குறித்து ரவி ஸ்ரீனிவாசுடனான விவாதத்தில் பதிவுகள் விவாதகளத்தில் எழுதியுள்ளேன்.(சில கருத்துகளில் இப்போது மாறுபாடு உண்டு.) அதை மீண்டும் இங்கே தொடங்க நினைப்பவர்கள் தொடங்கலாம்.

அநாதை ஆனந்தனின் கருத்துக்கு நன்றி. சிம்புவை கண்டிக்க புராணகாலத்திற்கு செல்ல தேவையுள்ள நீங்கள் இது குறித்த புள்ளிவிவரங்களை தேடி செல்லலாம். உங்களுக்கு அது ரொம்பவே தெவைப்படும். எனக்கு சிம்புவின் ஆண்குறியை வெட்டுவது மட்டுமே இங்கே முக்கியம்-திசைதிருப்புவது அல்ல!

12/07/2004 3:52 PM  
Blogger அனாதை ஆனந்தன் said...

??

மன்னிச்சுக்கோங்கன்னா, , என்ன பன்றதுன்னா தலையிலே மசாலா இல்ல, எங்களால எல்லாம்
புள்ளிவிவரங்களையும், புராணங்களையும் மீறி யோசிக்க முடியுமாங்கன்னா? தப்பா உள்ள வந்துட்டேன்னா. கால் இருந்தா காண்பிங்கன்னா. அப்படியே அந்த (மற்றும்) இந்த, "திசை திருப்புற" கமெண்ட்ஸையும் அழிச்சுட்டா மிக்க நன்மையா இருக்கும்ன்னா. யாரோட திசையையும் திருப்பறதுல நேக்கு
எந்தக்காலத்திலேயும் விருப்பமில்லன்னா

நன்றிங்கன்னா,
அனாதை.

12/08/2004 11:44 AM  
Blogger ROSAVASANTH said...

அநாதை என் தளத்தில் ஒரு கமெண்டும் நீக்கபடாது, என்னை தாயோளி என்று திட்டிவரும் கமெண்ட் கூட (மற்ரவரை அப்படி திட்டினால் ஒழிய). இது உமக்கும் தெரியும். எதற்கு இந்த அருபருப்பான கூப்பாடு. கையில் விசயம் இருந்தால் சிம்புவிற்கும், லச்சுமணணுக்கும், பரசுராமனுக்கும் என்ன சம்பந்தம் என்று எழுதவேண்டியதுதானே! இல்லை, அதை நியாயபடுத்தும் யாராவது சிம்பு பற்றி பேசினார்களா? இன்றய சூழலில் யாரையாவது லச்சுமணன் பரசுராமன் என்று குறியீடாய் சொல்ல விரும்புகிறீர்களா?

சின்னதாய் ஈகோவை தட்டியதற்கு ஏன் இந்த அழுகையும் கூப்பாடும். வெட்கமில்லை.

12/08/2004 6:19 PM  
Blogger அனாதை ஆனந்தன் said...

ரோசாவசந்த்,

ஈகோவைத் தட்டியதற்கு அழுகை கூப்பாடு போட்டேனே? வெட்கமில்லை எல்லாம் இருக்கட்டும். மிகச் சாதாரணமான ஒரு கமெண்ட்டுக்கு இது வரையில்
இல்லாத ஒரு பதில் கிடைத்தது. கூடவே திசை திருப்பவேண்டாம் , புள்ளிவிவரத்தை தேடிப் போய் கொள்ளுங்கள் என்று போட்ட பிறகு மரியாதை இல்லை
விலகிக் கொள்ள வேண்டும் என்று அப்படிக் கேட்டேன் அதற்கென்னா? தயோலி போட்ட போஸ்ட்டை வைத்துக் கொள்வது உம்ம உரிமை அதில்
யார் தலையிட்டது. என்னுடையதை திரும்ப எடுத்துக் கொள்கிறேன் என்பது என் உரிமை இல்லையா? என்னுடைய இடத்தில் எவர் கமெண்டையும்
நான் நீக்குவதில்லை என்பது உமக்கும் தெரியும். இருந்தாலும் தேவையென்று வந்தபோது தனி மடலில், என்னுடைய தனிப்பட்ட விவரத்தை
சொல்லிவிட்டேன் எனக்கு பின்னால் ஆபத்து வரலாம் அந்த கமெண்டை நீக்கிவிடமுடியுமா என நீங்கள் கேட்டு நான் நீக்கவில்லையா?
எது அழுகை? கிண்டலைக்கூட புரியாத அளவுக்கு ஆத்திரம் கண்ணை மறைக்கலாம். ஆனால் அதற்காக என் உரிமையை மறுக்க வேண்டும்
என்பதில்லையே?

அனாதை

12/09/2004 1:22 PM  
Blogger ROSAVASANTH said...

அநாதை மன்னிக்கவும். என் தாயறிய(ஸ்ட்ராங்காக சொல்ல வேறு என்ன வார்த்தை வேண்டுமோ, அதை போட்டுகொள்ளலாம்) எனக்கு உங்கள் மேல் ஆத்திரம் இல்லை. எல்லா மனிதனுக்கும் இருப்பதுபோல், தான் சொன்னதை நியாயபடுத்தும் உந்துதல் எனக்கும் இருக்கலாம். என்னால் அதை முழுவதும் சுயநினைவுடன் தவிர்பது சாத்தியமில்லை என்பது தெரியும்.

பரசுராமன் கதையெல்லாம், எந்த தொடர்பும் இல்லாமல் நீங்கள் எழுதியதை வேண்டுமென்றே செய்த குசும்பாக எடுத்துகொண்டேன். அதானால் திசை திருப்ப வேண்டாம்(கிண்டலாகத்தான்) என்றேன். இது வரையில் நான் சொல்லாத பதில்தான்! நீங்கள் எழுதியதும் இதுவரை சொல்லாததுதானே! அந்த உணர்விலேயே இந்த குசும்பை செய்வதாக நினைத்து ஒரு வரி எழுதினேன். அதற்கு நீங்கள் போட்ட பதில் உண்மையிலேயே எரிச்சலை தந்தது. அதனால் அப்படி எழுதினேன்.

நீங்கள் நீக்கவேண்டும் என்று சொன்னதை, என்னை நீக்க சொல்லி கேட்டுகொண்டதாக எனக்கு புரியவில்லை. என்னை கிண்டல் செய்வதாக நினைத்தேன். நீக்கவேண்டும் என்று நினைத்தால், அது அருகில் இருக்கும் குப்பை தொட்டியை சுட்ட வேண்டியதுதானே. (உண்மையிலேயே நீக்க நினைத்துய், குப்பை தொட்டியும் இல்லையென்றால் மீண்டும் எழுதவும்.)

கொஞ்சம் நான் அன்று எழுதிய மெயிலை மீண்டும் பார்க்கமுடியுமா? நீங்கள் இந்தியா போய்கொண்டிருந்தீர்கள். `நீக்கவேண்டியது ஒரு பெரிய பிரச்சனையில்லை, அனாவசிய பிரச்சனை பிரச்சனை எதெற்கு, அது தேவையில்லை என்று நினைப்பதால், முடிந்தால் நீக்கு'மாறு எழுதியிருந்ததாய் நினைக்கிறேன். எனக்கு மட்டுமல்ல பல நண்பர்களுக்கு வெட்டியாய் பிரச்சனைகள் வருவதை தவிர்க்கவே அலோசனை சொல்லியிருக்கிறேன். அமைதிகாலத்தில் `ஜிகாத்' கூடாது தெரியாதா?

உண்மையிலேயே பிரச்சனையை எதிர்கொள்ள தேவை என்று வந்தால், ரோஸாவசந்துக்கு இதெல்லாம் ஜூஜுபி அநாதை! அதை அந்த நிலமை வரும்போதுதான் பேசமுடியும் என்பதால் இப்போதைக்கு பீலாவாகவே எடுத்துகொள்ளலாம், பிரச்சனையில்லை.

உண்மையிலேயே உங்கள் கமெண்டை நீக்கவேண்டுமா என்று சொல்லுங்கள்.

என்ன நடந்தாலும் அன்புள்ள வசந்த்.

12/09/2004 5:44 PM  
Blogger மாயவரத்தான் said...

அதெல்லாம் இருக்கட்டும் ரோஷாவசந்த்....சிம்புவின் 'மேற்படி' (கீழ்படி?!) இடத்தை கட் பண்ண வேண்டும் என்று சொல்லி விட்டு அவரோட 'இ-மெயில்' விலாசத்தை கேட்டிருக்கீங்களே?! இ-மெயில் மூலமாகவே 'அதை' கட் பண்ணிட முடியுமா?! அடேங்கப்பா...technology has improved so much! மக்களே...இனிமே யாருகிட்டேருந்தாவது இ-மெயில் வந்தா பார்த்து தொறங்க (அட...இமெயிலை சொன்னேன்ப்பா!)...அப்புறம் ஏற்படும் பின் (முன்?!) விளைவுகளுக்கு யாரும் பொறுப்பல்ல! ஹிஹி!! (சும்மா...இந்த ஏரியா (அட..உங்க காமெண்ட் செக்ஷன் சொன்னேன்!) ரொம்ப ஹாட்டா இருக்குன்னு இப்படி ஒரு காமெண்ட் கொடுத்திருக்கேன்...என்ன கலாய்க்காதீங்க!)

12/12/2004 9:20 PM  
Blogger ROSAVASANTH said...

மாயவரத்தான், உங்களுக்கு நகைச்சுவை உணர்வு கொஞ்சம் அதிகம் போல் தெரிகிறதே! உண்மையாகவா?

சிம்புவின் ஈமெயில் முகவரி கேட்டது, குறி அறுக்க அல்ல அப்படி ஒரு எண்ணம் இருப்பது குறித்து தெரிவிக்க. அதுவும் தவிர கொஞ்சம் ஒழுங்கா படிக்க கத்துக்க கூடாதா ராஜா!

"உதாரணமாய் `கெட்ட' பெண்களை கொல்லவேண்டும் என்று கருத்தை, ஒரு தர்மமமாய், படத்தில் வலியுறுத்தி பிரச்சாரம் செய்யும் சிம்பு, நடைமுறை வாழ்வில் அதை செய்ய போவதில்லை. இந்த படம் மூலம் உந்துதல் அடைந்து யாரவது செய்தால் உண்டு. அதை போல இந்த கோஷத்தை, ஒரு கோஷமாக மட்டும் முன் வைக்கிறேன். ...

....இதனால் உந்துதல் அடைந்து யாராவது-சிம்புவின் மனைவி உட்பட-இதை நிகழ்த்தி காட்டினால் நான் பொறுப்பல்ல."

12/13/2004 5:42 PM  
Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

முந்தா நாள் தான் இந்த படம் பார்த்தேன்!! கன்றாவி
இதில் வேறு "இந்தியன்" பட கமல் போல சிம்புவை எந்த காவலரும் பிடிக்க மாட்டார்கள் என்பது போல காட்டி இருப்பது மாக மட்டமான முடிவு.

12/17/2004 2:55 AM  
Blogger ஒரு பொடிச்சி said...

இளைய தலைமுறை நடிகர்களில் சிம்புதான் பிற்போக்காக, அதை proud ஆய் present வேறு பண்ணுகிறார். இந்தப் படம் நன்றாக ஓடுகிறது. (நான் இன்னும் பார்க்கவில்லை)
இந்த சமயத்தில் Boys இற்கு வந்த எதிர்ப்பை நினைப்பது தவிர்க்க முடியாம இருக்கு. சங்கரை பாய்ஸ் இற்காக நிராகரிப்பது தேவையற்ற ஒன்று.'சங்கரின் படங்களுக்குள்' பாய்ஸ்தான் பிரமாதமான படம். Gentleman போன்ற படங்களுக்காக உறுப்பை அறுங்களேன். பாய்ஸ் இல் உள்ள பிரச்சினை என்ன? சின்னப்பெடியங்கள் எல்லாம் வயதுகூடிய பெண்களை பார்பப்து சரியென்று அதில் யார் defend பண்ணினார்கள்? தமிழ் சூழலில் உள்ள பிச்சினை இதுதான். மறைத்து மறைத்து சொல்லுகிற ஆபாசம் பொருட்டே அல்ல. boys ஒரு பறவாயில்லைவகைப் படம்தான். இளைஞர்களுடைய வாழ்வுமுறையோ, பார்வையோ அதிலிருந்து விலகியதாக எனக்குத் தோணவில்லை. அதையிட்டுத் பயந்த தமிழ் நெஞ்சம்ங்கள் 'சீ'எனப் போட்டப் பத்திரிகைகள் சிம்புவின் நடிப்பில் சிலித்துப்போய் குந்தியுள்ளது. இது பைசா பிரயோசனப்படாத எதிர்ப்பும் பாராட்டும். பாய்ஸ் இற்குத் தந்த எதிர்ப்பில் அறிவுஸீவிகள் (ஞாநி/யமுனா) முதல் யாரேனும் இத்தகைய படங்களிற்குத் தந்திருருந்தால் தமிழ்ப்படமும் தமிழ்நெஞ்சங்களும் எப்பவோ உருப்பட்டிருக்கும். ஆனந்தவிகடனுக்கோ பிற ஊடகங்களுக்கோ அது தோணாது; உருப்பட்ட சமூகத்தால் அவர்களுக்கும் பைசா பிரயோயனமில்லை. இன்னுமொன்று பொறுத்திருந்து பாருங்களன்.
பெண்களை (மன்னன், படையப்பா) எப்படி எப்படி 'நல்ல' 'ஒழுக்க' 'கீழ்ப்படிந்த' வர்களாய் இருக்கவேண்டுமென்று சொல்லி மகிழ்ந்த ராஸனிகாந்தபோல இனி சிம்புதான் வந்தாலும் வருவார். நடந்தால் அது பெரிய அதிசயமில்லை.

நிச்சயமாக, 'இந்த சிம்பு ஒரே ஒரு பெண்ணை மட்டும் தொட்டு வாழபோவதில்லை' இருக்கப் போவதில்லைத்தான்.
ஆனால் இத்தகைய கருத்துக்களை பரப்பிக்கொண்டுதான் இருப்பார்க்ள்.
ஆனால் என்றைக்காவது இந்த தமிழ் இரசிகர்கள் தங்கள் கட்டைவிரல்களுக்குப் பதில், இத்தகைய அறுப்புகளில் ஈடுபடுவர்களெனில் ..... நினைக்கவே உவப்பாக இருக்கிறது!

12/20/2004 11:37 AM  
Blogger G.Ragavan said...

// கெட்ட பெண்ணைக் கொல்ல வேண்டும் // இதிலிருக்கும் கெட்ட என்பதை முதலில் நீக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஒரு பெண் பல ஆண்களுடன் உறவு வைப்பதால் கெட்டவளாகி விடுகிறாளா? சரி. அப்படியே வைத்துக் கொள்வோம். அப்படியானால் பல பெண்களுடன் உறவு வைத்திருக்கும் ஆணும் கெட்டவனே. யாராவது ரதி என்று படமெடுத்து...கெட்ட ஆண்களைக் கொல்வது போல எடுக்கலாம். அதைச் செய்ய மாட்டாங்க. இந்த விஷய்த்துல மட்டும் ஆணுக்கொரு நீதி...பெண்ணுக்கொரு நீதி வரும். கொலையே தப்பு. அத மொதல்ல சொல்லுங்கப்பா!

5/31/2005 11:25 PM  
Blogger குழலி / Kuzhali said...

சரியா சொன்னீங்க ரோசாவசந்த்,
அது சரி ஏன் யாரும் வாக்களிக்கவில்லை, ஏதோ என்னால் முடிந்த ஒன்று குத்திவிடுகின்றேன்

5/31/2005 11:49 PM  
Blogger Vijayakumar said...

அய்யோ குழலி, சிம்புவின் ஆண்குறி அறுக்கப்பட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டதே. அதாவது தமிழ்மணம் வாக்கு சிஸ்டம் வர்றதுக்கு முன்னாடியே இந்த பதிவு வந்து விட்டது. அதுனால வாக்கு இல்ல.

அது சரி இப்போ அந்த கதைக்கு தினகரன் விருது வேற கிடச்சிருக்காம். மக்கள் தான் விரும்பி தேர்ந்தெடுத்தாங்கன்னு பெருமையா சொல்லிக்கிறாங்க. என்னமோப்பா...ஒன்னும் புரியல.

6/01/2005 12:51 AM  
Blogger குழலி / Kuzhali said...

நான் தமிழ்மணத்துக்கு புதுசா அதான் தெரியவில்லை எனக்கு

//அது சரி இப்போ அந்த கதைக்கு தினகரன் விருது வேற கிடச்சிருக்காம். மக்கள் தான் விரும்பி தேர்ந்தெடுத்தாங்கன்னு பெருமையா சொல்லிக்கிறாங்க. என்னமோப்பா...ஒன்னும் புரியல.
//
நமக்கு தெரியாத இந்த தினகரன் விருதும் ஏனைய விருதுகளும் முதலில் தேர்ந்தெடுத்துவிட்டு பிறகு மக்கள் தேர்ந்தெடுத்தார்கள் என கூறுவது

6/01/2005 12:59 AM  
Blogger SnackDragon said...

சிம்புவின் ஆண்குறிக்கா விருது ..அச்சச்சோ.. ;-)

6/01/2005 1:57 AM  
Blogger ROSAVASANTH said...

நன்றி புதிய கனா. உங்கள் பதிவை நேற்று பார்த்தேன், பின்னூட்டமிட முடியவில்லை. நான் சமீபகாலமாய் செய்திகள் படிக்காததால் சிம்புக்கு விருது கிடைத்த செய்தியை நல்லவேளையாய் படிக்கவில்லை.

'வெறும் பரபரப்பிற்காகவும், கவனத்தை ஈர்ப்பதற்காகவும் மட்டும்' எழுதியதாக பலர் சொன்னபோது, என் பதிவை வெறும் சவடாலாக மட்டும் பார்க்காமல் அடிப்படையை புரிந்துகொண்டதற்கு உங்களுக்கும் மற்றவ்ர்களுக்கும் நன்றி.

6/01/2005 12:52 PM  
Blogger ROSAVASANTH said...

குழலி, விஜய், ராகவன், கார்த்திக் கருத்துக்கு நன்றி.

//இதிலிருக்கும் கெட்ட என்பதை முதலில் நீக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஒரு பெண் பல ஆண்களுடன் உறவு வைப்பதால் கெட்டவளாகி விடுகிறாளா?//

ராகவன், உங்கள் கருத்துதான் எனக்கும். ஆனால் நான் 'கெட்ட' என்பதை மேற்கோள்குறிகளுக்கிடையில் மட்டுமே எழுதியிருப்பதை கவனிக்கவும். சுயநினைவுடன் இதை செய்தும் எங்காவது தவறவிட்டிருந்தால் அறியதரவும். கருத்துக்கு நன்றி.

6/01/2005 12:56 PM  
Blogger G.Ragavan said...

// ராகவன், உங்கள் கருத்துதான் எனக்கும். ஆனால் நான் 'கெட்ட' என்பதை மேற்கோள்குறிகளுக்கிடையில் மட்டுமே எழுதியிருப்பதை கவனிக்கவும். சுயநினைவுடன் இதை செய்தும் எங்காவது தவறவிட்டிருந்தால் அறியதரவும். கருத்துக்கு நன்றி. //

ஆமாம். நீங்கள் மேற்கோளிட்டிருக்கின்றீர்கள். அதை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

6/01/2005 6:01 PM  
Blogger அலிகள் ஓய்வதில்லை! said...

நான் தேவையில்லாத இடத்திற்கு வந்து விட்டேனோ?

5/31/2006 6:42 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter