ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, March 16, 2005

பதிலும் செருப்படிகளும் !

மிகுந்த அலுப்புடன் இதை எழுத வேண்டியுள்ளது. ஒரு குறியீடாகவாவது சில விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நினைப்பதால், அதை தெரிவித்த பின் இது போன்ற விளக்கங்களை வேறு தந்து தொலைக்க வேண்டியுள்ளது. என்ன செய்ய, நாயை அடித்தால்...!

காஞ்சி ஃபிலிம்ஸ் தனது வழக்கமான 'புத்திசாலித்தனம், பகுத்தறிவு, லாட்டரல் திங்கிங்' எல்லாம் கலந்து தன் பதிவில் ஒரு படம் போட்டார். பீகாரில் இன்னும் ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்கள் மலம் அள்ளுகிறார்களாம்! இந்த 'செய்தியை' எங்கோ படித்து, இவர் மூளை ஆவியுடன் பேசும் போர்டில் கை வைத்தது போல் சுற்றத் தொடங்கி, கொஞ்சம் லாட்டரல் திங்கிங் சேர்த்ததில் ஒரு ஐடியா வந்தது.

பிகாரில் மலம் அள்ளுவது பற்றி ஒருவர் செய்தி படித்தால் பொதுவாய் என்ன செய்வார்? அது குறித்து தனது வருத்தத்தை கவலையை முன்வைத்து பதிவு எழுதலாம். இந்த அவலம் தொடர்வதற்கான காரணமான சமூக அமைபு பற்றி எழுதலாம். அது குறித்த கட்டுரை எதற்காவது சுட்டி தரலாம். இதெல்லாம் சாதாரணமாய் ஒருவருக்கு தோன்றகூடியது. இப்படிப்பட்ட பிகாரில் பாஜக தொடங்கி கம்யூனிஸ்டுகள் வரை என்ன செய்கிறார்கள் என்று ஒருவேளை கேள்வி எழுப்பலாம். இன்னும் கொஞ்சம் குதர்கமாய் 'பார்பனியத்துக்கு எதிராக' பிறபடுத்தப் பட்டவரின் ஆட்சி நடத்தபடுவதாக, பலரால் தூக்கி பிடிக்கப்படும் லல்லுவை, முன்வைத்து கேள்வி எழுப்பலாம். இன்னும் இது தொடர்பாய் ஒரு வலைப்பதிவாளர் செய்ய எத்தனையோ உண்டு. ஆனால் இதெல்லாம் சாதாரணமாய் சித்திக்க கூடியவர்கள் செய்ய கூடிய காரியம். நம்ம காஞ்சி பிலிம்ஸ் லாட்டரல் பகுத்தறிவுக்காரர். அவரால் இப்படி நேரடியாய் சிந்திக்க முடியுமா? தன் கண்ணில் ஓயாமல் ரொம்ப நாளாய் உருத்திகொண்டிருக்கும் ராமதாஸ்-திருமாவின் இணைவு ஞாபகத்திற்கு வருகிறது. ராமதாஸ் திருமா ஒரு படத்தில் பிடித்துகொண்டிருப்பதாக உள்ள ஒரு போர்டில் பீகாரில் மலம் அள்ளும் செய்தியை போட்டு, "'தம் இன மக்கள் மலம் சுமக்கும் கொடுமையில் இருக்கும்போது அதனை கவனியாது, திருமா தன் இன விரோதியாய் உள்ள ராமதாசோடு திறிகிறார் பார்" என்று (தாஸ் போன்றவர்கள் கோனார் தமிழுரை எழுதும்) அர்த்தம் தொனிக்கும் வகையில் கார்ட்டூன் வெளியிடுகிறாராம். அதற்கு தலைப்பு 'no comments'. ஒரு குறிப்பிட்ட செய்தியை எடுத்து போட்டு, அல்லது மற்றவர் சொன்னதை மேற்கோள் காட்டி, தனக்கு சொல்ல எதுவும் தேவையில்லை என்று சொல்லும் விதமாய் 'நோ கமெண்ட்ஸ்' என்று சொல்லலாம். இப்படி தெளிவாய் தன் கமெண்டை ஒரு படம் போட்டு சொல்லி விட்டு, 'நோ கமெண்ட்ஸ்' சொல்லும் கேஸை இப்போதுதான் பார்கிறேன்! நல்ல பகுத்தறிவு!

முதலில் கவனிக்க வேண்டியது பீகாரில் மட்டுமல்லாது எல்லா இந்திய மானிலங்களிலும், தமிழகத்திலும் யார் மலம் அள்ளுகிறார்கள், துப்புரவு வேலை யாரால் செய்யப்படுகிறது என்றெல்லாம் காஞ்சி ஃபிலிம்ஸுக்கு யோசனை வரவில்லை. ஒரு வேளை தமிழகத்திலும் இன்னும் துப்புரவு தொழில் குறிப்பிட்ட ஜாதியினரால் செய்யப் படுவதை சொல்லி இந்த படத்தை போட்டிருந்தாரானால் கொஞ்சமாவது பொருத்தம் இருந்திருக்கும். தமிழக நிலமை அவருக்கு தெரியவில்லையோ, அல்லது நான் தமிழகத்திலிருந்து கிளம்பி வந்த பின் பாப்பானும், வெள்ளாளனும், தேவனும் மலம் அள்ள தொடங்கி விட்டார்களோ, என்ன காரணமோ தெரியவில்லை. பீகாரில் மட்டும் இருப்பதாக இவர் படித்த ஒரு செய்தியை, தர்க்கரீதியான தொடர்பு எதுவும் இல்லாமல் திருமா/ராமதாஸ் இணைவுடன் தொடர்பு படுத்தி இவர் ஒளறிக் கொட்டுவதன் முரணை பேசுவது எனக்கு முக்கியமல்ல. இவ்வாறு இவர் செய்வதன் பிண்ணணியில் இருக்கும் இவரது நோக்கமும் உளவியலுமே முக்கியமாய் கவனிக்கப்பட வேண்டியது. இதற்கு பின்னால் வருவோம்.

காஞ்சி ஃபிலிம்ஸின் இந்த பதிவிற்கு பின்னுட்டமாய் "ராமதாஸிற்கு பீயள்ளும் வேலையைத்தான் திருமாவும் செய்கிறாரா?" என்று தாஸ் என்பவர் கேட்டிருந்தார். எல்லோரையும் விமர்சிப்பது போல் திருமாவளவனும் விமர்சனத்திற்கு உட்பட்டவரே! அதாவது ஒரு அலுவலகத்தில் எல்லோரும் லஞ்சம் வாங்கினால் எப்படி குற்றமோ அதே போல ஒரு தலித் லஞ்சம் வாங்கினாலும் அதை விமர்சிக்கலாம்! ஆனால் தலித் மீது 'விமர்சனம்' வைக்கும்போது மட்டும் அதற்கு வேறு நிறங்களில் கமெண்ட்கள் ஒரு பொது இடத்தில் வெளிப்படும். உள்ளே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஊறிகிடக்கும் சாதி வெறி நினைவிலி மனத்திலிருந்து உருவாக்கிய வார்த்தைகள் மேலே வரும். இங்கே தாஸ் திருமாவை பற்றி எழுதியுள்ளது பச்சையான ஜாதி வெறி இழையோடும் ஒரு வர்ணணை. நன்றாய் கவனிக்க வேண்டும், திருமாவை தவிர வேறு யாரை பற்றி விமர்சிக்க நேர்ந்தாலும் இந்த 'பீயள்ளும் உவமை; பயன்படுத்த பட்டிருக்காது. திருமாவளவன் ஒரு தலித் என்ற ஒரே காரணத்தினாலே இந்த 'பீயள்ளும் உவமை' பயன்படுத்த படுகிறது. மிக வெளிப்படையான ஜாதி வெறி பிடித்த ஒரு கமெண்ட். இணையத்தில் உலாவுதால் சிக்கல், இல்லையெனில் இதற்கு செருப்பால் நாலு கொடுத்திருக்க முடியும்.

நம் சூழலில் அவலம் இது ஒரு சாதி வெறி பிடித்த கமெண்ட் என்பதை கூட வாதம் செய்து புரிய வைக்க வேண்டிய நிலமை. இப்படி ஒரு கருத்தை ஒரு அரேபியரையோ, கருப்பரையோ ஃபிரான்ஸ் போன்ற ஒரு நாட்டில் (மேற்கின் எல்லா நாட்டிலுமே) யாரேனும் முன்வைத்திருந்தால் பெரிய பிரச்சனையாய் வெள்ளையர்களாலேயே மாற்றப்பட்டிருக்கும். நம் தமிழ் சூழலில் இது ஒரு இனவாத கருத்து என்று விளங்கி கொள்ள கூட நாதியில்லை. முகமுடியணிந்த நாய்கள் தொடங்கி, பெரியாரியம் பேசும் காஞ்சிபோன மலம் வரை, என்றென்றும் அன்புடயதாய் சொல்லிகொள்ளும் பாலாஜி உட்பட பலரால் வக்காலத்து வேறு வாங்கபடுகிறது.

நன்றாய் கவனிக்க வேண்டும். திருமாவளவனை தாராளமாய் விமர்சிக்கலாம். அதனுடன் நான் உடன்படலாம், மறுக்கலாம், எதிர்கலாம். இங்கே தாஸ் சொல்லியிருப்பது ஒரு ஆதிக்க ஜாதி உளவியலிலிருந்து வரும் ஒரு அசிங்கமான வசை. நியாயப்படி இதற்கு, தாஸின் அடையாளம் தெரிந்தால், வழக்கு தொடுக்க கூட முடியும். இங்கே பிரச்சனை திருமாவின் அரசியல் சரியா என்பது பற்றிய விவாதமல்ல. ஒரு ஜாதி வெறி வசையை ஒருவன் பொது களத்தில் முன்வைப்பதும், அதற்கு மற்றவர்கள் வக்காலத்து வங்குவதும்.

தாஸ் எழுதியதை அவ்வப்போது படித்ததில், அவருடன் என்னால் எதுவும் பேச முடியும் என்று தோன்றவில்லை. அவருடய சூப்பர் லாஜிக் சுப்பராயத்தனமான வாதங்களுக்கு பதிலளிக்கும் தர்க்க திறமை எனக்கு கிடையாது. அதனால் அவருடன் பேசும் நோக்கம் எனக்கு ஒருபோதும் கிடையாது. (என்னை உயர்த்தி அவரை தாழ்துவதாய் யாரும் நினைக்க வேண்டாம், இது வேறு வேறு மொழிகளில் பேசிக் கொள்வது மாதிரி ஒரு சிக்கல். நான் சொல்வது எதுவும் அவருக்கு புரிய வாய்ப்பில்லை, அவர் சொல்வது புரிந்தாலும் அதிலுள்ள பிரச்சனைகளை அவருக்கு விளக்க என்னிடம் திறமையில்லை.) அதனால் அவருடன் விவாதிக்க எதுவுமில்லை. ஜாதிவெறி கருத்துக்கு செருப்படி கண்டனம் மட்டுமே தெரிவிக்க முடிகிறது.

ஜாதியத்திற்கு எதிராய் பேசுவதாய் பதிவுகள் போட்டுவருவதாய் ஃபிலிம் காட்டிவரும் காஞ்சி மலம்ஸ், தாஸ் சொல்வதற்கு வக்காலத்து வாங்குவதை கவனிக்க வேண்டும். காஞ்சி மலம்ஸ் வெளியிட்டு வரும் பெரியாரிய கருத்துகளுக்கும் தாஸுக்கும் என்ன சம்பந்தமோ? ஆனால் இந்த விஷயத்தில் இருவரும் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். கூட பாலாஜி வேறு போய் சேருகிறார்.

தங்கமணி, மயிலாடுதுறை சிவா போன்றவர்களுக்கும் காஞ்சி ஏதோ வகையில் பாராட்டபட வேண்டியவராய் தெரிந்திருக்கிறது. எப்படி என்று எனக்கு புரியவில்லை. நானும் கூட காஞ்சியில் தொடக்கப் பதிவுகளில் வரவேற்று பாராட்டி பின்னூட்டம் அளித்திருக்கிறேன். ஆனால் இவர் தொடர்ந்து ஒரு தலித் எதிர்ப்பு நிலையையே எடுத்து வந்த பின்னும் எப்படி செய்கிறார்கள் என்று புரியவில்லை. பல பார்பன நரிகளுக்கு இணையான, திரிபு தர்கத்தையும் காஞ்சி மலம்ஸ் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். சம்பந்தமில்லாத இரண்டு விஷயங்களை ஒப்பிடுவது, இட ஒதுக்கீட்டிற்கு எதிராய் பார்ப்ன மற்ற ஆதிக்க ஜாதியினர் அளிக்கும் அதே தர்கத்தை முன்வைப்பது போன்ற வேலைகளையே இவரும் செய்து வருகிறார். திருமாவளவனின் இன்றய தமிழை முன்வைத்த அரசியலை விமர்சிக்கலாம். ஆனால் அங்கே "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு" என்று ஒரு உவமையை முன்வைப்பது காஞ்சி மலத்தில் வெளிப்படும், சாதிய உளவியலில் உருவான புழுவாகத்தான் தெரிகிறது. "தலித் என்று அடையாளம் தெரிய ஒரு பெண் மருத்துவ கல்லூரியில் நுழைவதுதான், அவர் துன்புறுத்த படுவதற்கான காரணம்' என்ற தொனியில் வாதத்தை தங்கமணியின் பதிவில் முன்வைத்தவர் இவர். தலித் அடையாளத்துடன் செல்வதால் ஒருவர் துன்புறுத்த படுவாரெனில், அது எத்தனை பெரிய அநியாயம் என்று இவர் கண்ணுக்கு தெரியாதது மட்டுமல்ல, இந்த வாதம் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது. இதை இன்னொரு இடத்திலும் சொல்கிறார்.

"நாங்களும் சாதின்னா என்னான்னு தெரியாம தான் சாமி பத்தாங்க்லாஸ்(10வது) வரைக்கும் படிச்சிகிட்டு இருந்தோம். +1 ல் சேரதுன்னா ஜாதி செர்டிபிகெட்டு வேனுமுன்னு சொல்லிபுட்டாங்க சாமி. அப்ப தான் நாங்க மொதோ முறையா அவுங்க அவுங்க அப்பா கிட்ட பொய் நம்ம ஜாதி என்ன ஜாதி அப்பான்னு கேட்டோம் சாமி. அதுக்கு அப்புரம் தான் சாமி அதுவரிக்கும் ரமெஷ், சுரெஷ், பாலகணேசா இருந்தவனெல்லாம் செட்டி ரமெஷாகவும், கோமுட்டி சுரெஷாகவும், கருப்பு ஐயரு பாலகணெஷாகவும் ஆகிபுட்டாங்க சாமி. எங்க மனசுல அதுவரைக்கும் உங்க வெள்ள மனசு மாதிரி தான் இருந்திச்சி. கர்ணம் ஆபிசில போய் கியூ நின்னு ஜாதிங்கர கேவலத்த ஜாதி மதம் இல்லன்னு சொன்ன அசோக முத்திரைய குத்தி அரசாங்கம் தான் சாமி கொடுத்துச்சி."

விளக்க தேவையேயில்லை. அரசாங்கம்தான் ஜாதி சொல்லிகொடுக்கிறதாம். எப்படி, இட ஒதுக்கீட்டின் மூலமாக. இட ஒதுக்கீட்டிற்கு எதிராய் நேரடியாய் பேசுபவர்களை விட இப்படி பெரியார் அது இதென்று பேசும் காஞ்சி மலம்ஸ் எங்க நிக்குதுன்னு பாக்கணும்!

சம்பந்தமே இல்லாமல் சத்துணவின் தரத்தையும், இளையராஜாவின் திருவாசக சிம்பனியையும் இணைத்து கொச்சைபடுத்தியது. அதே போன்ற சற்றும் தொடர்பில்லாத ஒரு தர்க்கத்தை முன் வைத்து திருமாவை திட்டுகிறது. ஆனால் ஒரு விஷயம் காஞ்சி மலம்ஸ் திருமா/ராமதாஸையும் பிகார் மலம் அள்ளுதலையும் பற்றி எழுதியது ஒரு நேரடி விமர்சனம். அது எத்தனை முட்டாள்தனமாக, விஷமத்தனமாக இருந்தாலும், அதை ஒரு தர்கத்தை அணுகுவது போலவே அணுகியாக வேண்டும். ஆனால் இப்போது காஞ்சி மலம்ஸ் தாஸ் சொன்னதை அமோதித்து வக்காலத்து வங்கும்போது அவருடய ஜாதி வெறி மட்டுமே வெளிவருகிறது. மலம்ஸ் மேலும் புத்திசாலித்தனமாய் கேட்பதாய் நினைத்து கேட்கிறார்.

" அது சரி சாமி, பிஹார்ல மலம் அள்ளுகின்ற வேலையை செய்வதும் மனிதர்கள் தனே சாமி. அப்ப முதல்ல போயி அவங்கள மலம் வார வச்சவங்கள உங்க செருப்பால அடிச்சிட்டு வந்து மத்தவங்கள அடிக்கலாமே சாமி.
அந்த ஈன யோனியிலிருந்து பிறந்தவங்கள மலம் வார வச்சவங்க யார் தெரியுமா சாமி? அவங்கள தான் உங்களுக்கு நல்லா தெரியுமே சாமி. அவங்க இணையத்துல உலா வர்ரவங்க இல்ல சாமி. மடம் அமச்சு வாழ இலையில மலம் கழிக்கிராங்க சாமி. எங்க, இப்ப போய் அடிங்க பாக்கலாம்?"

நான் எங்கே பிகாரில் (தமிழ்நாட்டில் என்னய்யா வாழுது?) 'மலம் வார வச்சவங்களுக்கு', அல்லது சங்கராச்சாரிக்கு எங்கு வக்காலத்து வாங்கினேன். அவர்களை செருப்பால் அடிக்க வேண்டாம் என்று எங்கு சொன்னேன். பிரச்சனை ஒருவன் பொதுகளத்தில் ஒரு தலித்தை 'பீயள்ளும்' உவமை போட்டு பேசியது பற்றியது. அதை பற்றி பேசும் போது இப்படி தொடர்பில்லாமல் எதையாவது பேசுவதையே இந்த காஞ்சி மலம்ஸ் தொடர்ந்து செய்து வருவதை பார்க்கலாம். 'பீயள்ளும்' உவமை போட்டு பேசியதற்கு வக்காலத்து வாங்கியது மட்டுமில்லாமல் மீண்டும் "இப்ப சொல்லு சாமி திருமா என்ன வேலைய செய்யுறாருன்னு?" என்கிறார்.

90களில் ஒரு பெரும் தலித் எழுச்சி வந்து விவாதமும் சிந்தனையும் எங்கேயோ போய்கொண்டிருக்கும் போது, இன்னும் 50 வருடத்திற்கு முந்தய அரத பழசுகளை முன் வைத்து இந்த காஞ்சி மலம்ஸ் சொல்ல வருவது என்ன? பாப்பான், சங்கராச்சாரியார் பகவத் கீதை இதையெல்லாம் திட்டி, தனித்துவமாக தோன்றிவரும் தலித் இயக்கத்தை நிராகரிப்பதையும், விஷயத்தை திசை திருப்புவதையும் மட்டுமே! ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். காஞ்சி மலம்ஸின் லாஜிக் படியே இங்கிருக்கும் ஜாதி பிரிவினைகள் ஒரு பார்பனிய சதி. சாதிகளுக்கு இடையேயான சண்டகள் இந்த சதியின் ஒரு பகுதி. அப்படி இருக்கும் போது பாமகவும், விடுதலை சிறுத்தைகளும் தங்களுக்குள்ளான மோதலை நிறுத்தி ஒன்று சேர்வதுதான் சரியான அரசியலாக இருக்க முடியும். ஆனால் இந்த இணைவுதான் இவர் கண்ணை உறுத்துகிறது என்பதை கவனிக்க வேண்டும். அங்கதான் நிக்குது காஞ்சி மலம்ஸ்!

பாலாஜி வேறு வந்து நியாயம் கேட்கிறார். "திருமா நடத்துவது சந்தர்ப்பவாத அரசியல் என்பதால் தான் தாஸ் அப்படி கருத்து தெரிவித்தார்! " என்கிறார் இண்டர்பிரடேஷனின் நாயகர். தெரியாமல்தான் கேட்கிறேன். ஒரு பேச்சுக்கு திருமா செய்வது சந்தர்பவாத அரசியல் என்றே வைத்துகொண்டாலும், சந்தர்பவாத அரசியல் செய்பவர்களை எல்லாம் 'பீயள்ளும்' உவமை போட்டுதான் தாஸும், பாலாஜியும் பேசி வருகிறார்களா? ரவி ஸ்ரீனிவாஸ் சுஜாதாவை (அல்ல, சுஜாதாவை பின்பற்றுபவர்களை) 'முட்டாள்' என்று சொன்னதற்கே தார்மீக கோபம் கொண்டு மறுமொழிந்தவர் இவர். ஒரு பெரும் தலித் எழுச்சிக்கு காரணமான அரசியல் தலைவனை பொதுகளத்தில் எதற்கு உதவாத ஒரு நாய் 'பீயள்ளுவதாக' சொல்வதையும், அதை நியாயபடுத்தி கொண்டிருப்பதற்கும் வக்காலத்து வாங்குகிறார். இது பாப்பார லாஜிக் அல்லாமல் என்னவாம்? ' பாப்பான்' என்று சொன்னால் இவருக்கு பொத்து கொண்டு வரும், ஆனால் தலித்தை ஒருவர் கீழ்தரமாய் வர்ணிப்பதை பார்த்து கண்டனம் தெரிவிப்பது இவருக்கு கண்ணை உறுத்துகிறது.

மேலே எழுதிகொண்டே போகலாம் என்றாலும் அலுப்பு மட்டும் நேரமின்மை காரணமாய் இங்கே நிறுத்திகொள்கிறேன். திருமா, ராமதாஸ் இணைவு குறித்தும், அதன் விளைவாய் வெளிப்படும் தமிழை முன்வைத்த அரசியல் குறித்து எழுத தொடங்கிய உருப்படியான கட்டுரை ஒரு மாதமாய் பாதியில் நிற்கிறது. இது போன்ற polemicsற்கு செலவழிக்கும் நேரத்தை ஏனோ அதற்கு செலவழிக்க முடிவதில்லை. நிச்சயம் ஏதோ ஒரு வடிவத்தில் அது இங்கே வெளிவரும். அதனால் இதை இங்கேயே நிறுத்தி கொள்கிறேன்.

பிகு 1: இதை இங்கே ஒரு பதிவாய் எழுதியதற்கு காரணம் உண்டு. தாஸின் ஜாதி வெறி பின்னூட்டத்திற்கும், அதை ஆமோதித்த காஞ்சி மலம்ஸின் கருத்திற்கும் தங்கள் கண்டனத்தை இங்கே மற்ற நண்பர்கள் பதிவு செய்யமுடியும். "வன்மையாக கண்டிக்கிறேன்' என்ற வரி மிகவும் க்ளிஷேயாகி போனதாக எனக்கு தோன்றுவதால் 'செருப்பு', 'கெட்ட'வார்த்தைகள் போன்றவைகளால் எனக்கு கண்டிக்க வேண்டியுள்ளது. நண்பர்கள் அதை பின்பற்ற தேவையில்லை. தங்கள் பாணியில் கண்டிக்கலாம். கண்டிகாமலும் சும்மா இருக்கலாம். இன்னும் அநாகரிகமாய் பதிவு எழுதியதாய் என்னையும் கண்டிக்கலாம். நமது சூழல் எவ்வளவு அவலமானது என்று அறிந்துகொள்ளும் சந்தர்பத்தை உருவாக்க இதை இங்கே ஒரு பதிவாய் இட்டுள்ளேன்.

பிகு 2. ஒரு சந்தர்பத்தை உருவாக்கி தாஸ் சொன்னதை கண்டிக்கும் பொருட்டே இதை ரஜினி ராம்கியின் பதிவில் எழுதினேனே ஒழிய, இந்த பிரச்சனைக்கும் ரஜினிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ரஜினியை ஒரு பெரும் நிகழ்வாய் குறிப்பிட்டுள்ளேன், அதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. ரஜினி, எம்ஜியார், வீரப்பன், சுஜாதா, சோ கூட தமிழ் சூழலை பெரிய அளவில் பாதித்த ஒரு பெரும் நிகழ்வுகள்தான். இதை வெறும் வார்த்தைகளால் திட்டி புரிந்து கொண்டதாய் நினனக்காமல், இது குறித்த ஒரு அறிவுபூரவமான ஆய்வுகளும் விவாதமும் வரவேண்டும். அதற்கு வழி செய்யும் வகையிலேயே ரஜினி ராம்கியின் புத்தகததை வரேவேற்று வாழ்த்துரைத்தேன்.

காஞ்சி தன் வழக்கமான அசட்டுத்தனத்துடன் பாபா படத்தின் பாடல் வரிகளை எழுதி ஏதோ வழிந்திருக்கிறது. அதன் பின் என்ன தர்க்கம் இருந்தாலும், பாபா படத்தின் அந்த பாடல் வரிகளை முன்வைத்து திண்ணை விவாத களத்தில் சின்ன கருப்பனுடன் நடந்த விவாதத்தில் என் கருத்துக்கள் இருக்கிறது. விரும்பியவர்கள் போய் பார்கலாம்.

பிகு3. இந்த பதிவிற்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதில் எதுவும் அளிக்க, குறைந்த பட்சம் உடனடியாய், அளிக்க, உத்தேசமில்லை. எழுதுபவர்களுக்கு நன்றி!

Post a Comment

33 Comments:

Blogger ROSAVASANTH said...

காஞ்சி மலம்ஸில் மீண்டும் முகமுடி அணிந்த நாய் ஒன்று எழுதியது "உனக்கு எதிர்த்து கருத்து சொன்னால் பாப்பார புத்தியா? இது கீழ் சாதி புத்திதானே. .. நீயும் உன் சிறுத்தைகளும் தைலாபுரத்தில் போய் பீ அள்ளுங்கடா .."

3/17/2005 12:27 AM  
Blogger ROSAVASANTH said...

இங்கேயும், காஞ்சி மலம்ஸின் பதிவிலும் பாலாஜியிடம் வெளிப்படுவதாக சொல்லும் பாப்பார லாஜிக் வெற்று வசையல்ல. 'சுஜாதாவை ஒருவர் பொதுக்களத்தில் முட்டாள் என்று சொன்னால் அதற்கு தார்மீக கோபம் கொள்ளுவேன். திருமாவளவனை பீயள்ளுவதாய் (இப்போது அநானிமஸ் மீண்டும் சொன்னதையும் சேர்த்து) சொலவதை கண்டித்தால் அதை "செருப்பால அடிப்பேன் என்பதெல்லாம் மிக மிக அதிகம்," என்று பாலாஜி சொல்வதையே பாப்பார லாஜிக் என்று எழுதியுள்ளேன். பாலாஜி தர்க்க பூரவமாய் இதை நேர்மையாய் எதிர்கொண்டால் (இப்போது காஞ்சி மலம்ஸ் பதிவுகளில் சொதப்பியது போல் அல்லாமல்) மேலே பேசலாம்.

3/17/2005 12:50 AM  
Blogger Meyyappan Meyyappan said...

காஞ்சி பிலிம்ஸின் அந்தப் பதிவு, அதற்கு தாஸ் இட்ட பின்னூட்டம் இவையிரண்டையும் கண்டிக்கிறேன். இதை வெளிக்கொணர்வதற்காக இந்தப் பதிவு எழுதுவதற்குத் தேவையான உங்களது உழைப்பையும் நேரத்தையும் மதிக்கிறேன்.

3/17/2005 1:18 AM  
Blogger Narain Rajagopalan said...

கெட்ட வார்த்தை பேசக்கூடாது என்ற ஒரு வைராக்கியத்திலிருக்கும் நேரத்தில் இந்த பதிவு. நீங்கள் பதிவிலிட்டது மிக முக்கியமான அடிப்படையான விசயம். எனக்கும் திருமாவின் அரசியலில் கருத்துவேறுபாடுகளுண்டு. ஆனாலும், ஏற்கனவே பதிந்திருந்தபடி, திருமாவினை விட்டால் வேறு யார் தலித்திற்காக குரல் கொடுப்பார்கள் என்றும் எண்ணிப்பார்க்க வேண்டும். எனக்கென்னமோ வலைப்பதிவுகளிலும் குழு மனப்பான்மையின் தீவிரத்தோடு சிலர் அலைகின்றார்களோ என்று தோன்றுகிறது. தான்யாவின் பின்னூட்டத்தில் எழுப்பட்டிருந்த கேள்விகள் பொதுகளத்தில் வைத்து விவாதிக்கப்படவேண்டியவை. தலித் மட்டும்தான் தன் சாதி சார்ந்த அடையாளங்களை காபாற்றி இருக்க வேண்டுமா என்பது. அதுவரை ஒட்டுமொத்த குழுமனப்பான்மை ஆட்களுக்கும் "ச்சீ...த்தூ"

3/17/2005 1:28 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

வசந்த்:
உங்கள் எதிர்ப்புக் குரலுக்கு நன்றி. அடிக்கவேண்டியது சாதாரண செருப்பிலில்லை; மலத்தில் தோய்த்த செருப்பில். இது காஞ்சிபோன மலம்ஸ், தாஸ¤க்கு மட்டுமில்லை; அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கும் சேர்த்து தான்.

3/17/2005 1:48 AM  
Blogger Boston Bala said...

உங்களின் பதிவு "Being an activist is the rent we pay for being on the planet." என்னும் ஆலிஸ் வாக்கரின் (Alice Walker) மேற்கோளை நினைவுபடுத்துகிறது!

3/17/2005 2:17 AM  
Anonymous Anonymous said...

ரோசா வசந்த்,
உங்களுக்கு எவ்வளவு அலுப்போ, உங்களுக்கு புரிய வைக்க, எனக்கும் அதே அளவு அலுப்பு தான் ஏற்படுகிறது.

நான் கேட்பதெல்லாம், இதை நீங்கள் 'பாலாஜியின் மறை கழண்ட' லாஜிக் என்று கூறியிருந்தாலும் பரவாயில்லை! அதை விடுத்து, 'பாப்பார' லாஜிக் என்று வக்ரத்துடனும், வன்மத்துடனும் உரைப்பது, உங்கள் பார்ப்பன துவேஷத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது.

திருமா தலித் எழுச்சிக்கு பாடுபட்டவர் தான், சந்தேகமில்லை. அவரை திட்டியதை தட்டிக் கேட்கும் நீங்கள் மிகச் சிறந்த சாதனையாளரான வைரமுத்துவை (அவரும் தமிழுக்கு ஒரு வகையில் பெரிய சேவை செய்தவர் தான்) தரக்குறைவான முறையில் 'நாய்' என்று திட்டுவதோடு அல்லாமல், அதை சுட்டிக் காட்டியபோதும், தவறு என்று ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், இன்னபிறரை வேறு விடயங்களில் 'வருத்தம் தெரிவிக்கவில்லை' என்று குற்றம் சாட்டினீர்கள்! இதை 'சாத்தான் ஓதிய வேதம்' இல்லாமல் வேறென்ன சொல்வது???

எதற்கெடுத்தாலும், 'தர்க்க ரீதி'யாக எதிர்கொள்ளும்படி பிறருக்கு அரைகூவல் விடுவது, நீங்கள் என்னவோ 'தர்க்கத்தின் தலைவர்' (king of logic) என்ற உங்கள் மனநிலையின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. இதை சற்று குறைத்துக் கொண்டால் நல்லது.

இதற்கு மேல் எழுத அல்லது தர்க்கம் செய்ய விருப்பமும் இல்லை, நேரமும் இல்லை. அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக உள்ளது.
இனி மேல் மறுமொழி இடவும் உத்தேசம் இல்லை. நன்றி!

என்றென்றும் அன்புடன்
பாலா

3/17/2005 3:03 AM  
Anonymous Anonymous said...

ஆமாம். மனிதன். பார்ப்பான் சுண்ணியும் பறச் சுண்ணியும் கூட ஒண்ணுதான், போடவிட்டவர்கள் என்ற முறையில், ரெண்டுக்குமே தொழில் ஒண்டுதான், ஓட்டுறது!
அதற்கு இப்ப என்னா?
போய் நாராயணிட பதிவப் பாரு.
மனிதனா இருக்கப் பாரு. உருப்படியா கருத்துச் சொல்லப் பாரு.

பதிவப் புரியாம கத்தாத (தொடர்ந்து கத்தத்தான் போற, எண்டாலும்!)
வர்றோம்டா சீக்கிரம்!
குளவிகள் (குத்த)

3/17/2005 3:53 AM  
Blogger Thangamani said...

வசந்த்:

காஞ்சி பிலிம்ஸின் இடஒதுகீட்டுக்கெதிரான நிலைப்பாட்டையும், இராமதாஸ்-திருமா இணைப்பு அவரை எவ்வளவு தூரம் உறுத்துகிறது என்பதையும் நான் உணராமல் இல்லை. இந்த உறுத்தலைப் பற்றி மிக வியந்து அதற்குப்பின் இருக்கக்கூடிய உளவியலை புரிந்தும் கொண்டேன். ஆனால் நான் இதைப்பற்றி குறிப்பிடாமல் இருப்பதன் காரணமாக காஞ்சி பிலிம்ஸை ஆதரிக்கிறேன் அல்லது அவருடன் உடன் படுகிறேன் என்று நீங்கள் எண்ணுவது வருத்தமளிக்கிறது. காஞ்சி மட்டுமல்ல, தாஸ், இன்னும் இணையத்தில் பலருடன் என்னால் உரையாடுதல் சாத்தியமற்றது. இதற்குக்காரணம் மிகச்சரியாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'மொழிப்பிரச்சனைதான்'. இந்த தலித் விசயத்தில் மட்டுமல்ல ஈழத்தில் அமைதிப்படை புரிந்த அட்டுழியங்கள் குறித்து முன்பொருசமயம் மிக அசிங்கமான விவாதம் நடந்தது. அதிலும் நான் மெளனமாகவே இருந்தேன். காரணம் மொழிப்பிரச்சனைதான். ஏனெனில் மிகத்தெளிவான முடிவோடு தாங்கள் யார் என்பதை அறிந்திருப்போருடன் என்னால் விவாதிக்கமுடியாது; ஏனெனில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்தே இருக்கிறார்கள்! நீங்கள் வெளிப்படையாகக் குறிப்பிட்டதற்கு நன்றி.

இங்கு தாசின் சாதிய வெறிபிடித்த பின்னூட்டத்தையும், காஞ்சி பிலிம்ஸின் தலித் விரோத அணுகுமுறையையையும் கண்டிகிறேன்.

3/17/2005 3:58 AM  
Anonymous Anonymous said...

mail sent to blogger.

Hi,

I would like to register complaint about a blogger who is very abusive.

http://www.blogger.com/profile/6684741

He writes in Tamil language. He doesnt have a blog, but has created a blogger ID to comment in blogger blogs. I have seen his comments in two blogs(could be more)

http://sundaravadivel.blogspot.com/2005/03/blog-post_111081476478522611.html#111082619794892794

http://rozavasanth.blogspot.com/2005/03/blog-post.html#111099871864545786

http://rozavasanth.blogspot.com/2005/03/blog-post.html#111099921803127264

Since these comments are in Tamil, you might have difficulties. These comments are very harsh and are very abusive esp. towards women. I hope you could get people connected to - http://www.google.com/intl/ta

Hope you would do something about it.

Is there any way to restrict people from just creating blogs and not using them atall?

Thanks for your time.

3/17/2005 4:08 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

அன்பு நண்பர் ரோச வசந்திற்கு
வணக்கம். என்னை நீங்கள் குறிப்பிடவிட்டாலும் நான் இங்கே பதில் சொல்வது என் கடமை.
காஞ்சி மலம்ஸ்(சூப்பர் பெயர்) எனக்கு யார் என்று தெரியவில்லை. அந்த பதிவில் நான் வாழ்த்தி
எழுதியதிற்கு வருந்துகிறேன்.மன்னிக்கவும். நான் அங்கு எழுதியதிற்கு காரணம் சகோதிரி அருள்மொழி அவர்கள் பாபா படம் சம்பந்தமாக தலையிட்டார்கள் என்று சொல்லதான்.
அடுத்து உங்களது விசயதிற்கு வருகிறேன். நீங்கள் எழுதிய பல எழுத்துகளை நான் பலமுறை
வியந்து போய படித்து இருக்கிறேன். அண்ணன் திருமாவை யார் குறை சொன்னாலும் என்னால் முடிந்த வரை திண்ணையில் பலமுறை திருமாவை ஆதரித்து பதில் சொல்லி இருக்கிறேன். நீங்கள் உங்கள் பார்வையில் கிழி கிழி என்று எழதியதிற்க்கு மகிழ்ச்சி! காஞ்சி மலம்ஸ் ஏற்கனவே ஒருமுறை எனக்கு நன்கு அறிமுகமான அருட்தந்தை காஸ்பர் ஜெகத் காஸ்பர் ராஜை குறைப் பட்டு எழதி இருந்தார். அதற்கும் நான் கண்டித்து எழத மிடியாமால் போய்விட்டது. தவறுக்கு வருந்துகிறேன். வலைப் பூக்களில் நீங்கள் உங்களுக்கு தவறு என்று படுகிற காரணத்தை நீங்கள் நார் நாராக கிழித்து எழுதுவதை நான் மனபூர்வமாக வரவேற்கிறேன். தொடரட்டும் உங்களது பணி.
அன்புடன்
மயிலாடுதுறை சிவா...

3/17/2005 4:25 AM  
Blogger கறுப்பி said...

ரோசாவசந்த் முதலில் உங்கள் கோபத்தைக் கண்ட போது எனக்குப் பெரிதாக ஒன்றும் விளங்கவில்லை. இந்திய அரசியலில் அதிக நாட்டமில்லாததால் அது ஏதோ பிரச்சனை என்று விட்டுவிட்டேன். இன்று நேரம் கிடைத்ததால் தங்கள் பத்தியைப் படித்தேன். தாங்களும் ஒரு சிறிய தவறைச் செய்துவிட்டீர்கள். தாஸிற்கு செருப்பால் அடிப்பேன் என்று மொட்டையாகத் தாங்கள் எழுதியதால் ஏதோ நண்பனைக் கிண்டல் அடிக்கின்றீர்கள் என்று விட்டுவிட்டேன். தற்போதுதான் தாஸ் இன் அந்தப் பின்னூட்டத்தில் இருக்கும் கீழ்த்தரமான நோக்கத்தைப் புரிந்து கொண்டேன். என் அனுபவத்திலிருந்து சொல்லுகின்றேன். மனிதர்கள் மாறுவதில்லை. மாறுவதுபோல் பாவனை மட்டுமே செய்கின்றார்கள். அவர்கள் அடிமனதில் அவர்கள் வாழ்ந்த வளர்க்கப்பட்ட கூ10ழலின் தாக்கம் இருந்தபடியே இருக்கின்றது. அது அவ்வப்போது எட்டிப்பார்க்கும்.

3/17/2005 4:32 AM  
Blogger சன்னாசி said...

பிரச்னை எங்கே ஆரம்பித்தது?

காஞ்சி ஃபிலிம்ஸ், ராமதாஸ்-திருமாவளவனின் படத்தை "ஒரு படம் ஓராயிரம் வாக்கியங்களுக்குச் சமம்" என்ற ரீதியில் "அப்பாவியாகப்" போட்டார். இத்தனை பேர் குடுமியைப் பிய்த்துக்கொள்ள வைத்த அது, அவர் "இதுவரை திட்டிக்கொண்டிருப்பவர்களையும் மிஞ்சிய" சாதுர்யம். அவர் பாஷையிலேயே சொன்னால், "படிக்கிறது ராமாயணம், இடிக்கிறது அனுமார் கோயில்".

தாஸ் அடுத்து வந்தார். "ராமதாஸ் வாலைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்க இந்தத் திருமாவளவனுக்கு அசிங்கமாயில்லை" என்று சொல்லியிருந்தால், அதன் தொனி மீ்தோ கருத்து மீதோ, எதிர்ப்பேதுமிருந்தாலும் நாகரீகமாகச் சொல்லப்பட்டிருக்கும். அதைத்தான் எத்தனையோ பேர் குறைசொல்கிறார்களே, சொல்லிக்கொண்டிருக்கிறார்களே? "அதுதான் திருமாவளவன், ராமதாஸ் மலத்தை அள்ளப் போறாரே" என்று ஒரு பட்டாக்கத்தியைப் போட்டார். இதிலுள்ள "தொனி" என்னவென்று குறைந்தபட்ச சுய அறிவுள்ளவர்களுக்காவது விளங்கும்.

அடுத்து ரோஸாவசந்த், செருப்பால் அடிப்பேனென்றார். இது அனைத்தும் நிகழ்ந்த வரிசை இது. இதற்கடுத்து நுழைந்த ஒரு அநாமதேயம், சென்ற இடமெல்லாம் ஒண்ணுக்கடித்துக்கொண்டு அலைகிறது: பெண் (அல்லது பெண் என்ற போர்வையில்) எழுதும் பதிவில் போய் மாரைப்பற்றிக் கேட்கிறது, காஞ்சி ஃபிலிம்ஸில் போய் தன் பங்குக்கு அள்ளச்சொல்கிறது.

இதையெல்லாம் நொட்டை சொல்லாமல் அல்லது லேசாக நொட்டை சொல்லிவிட்டு, இப்போது ரோஸாவசந்த்தின் செருப்பைப் பஞ்சாயத்துக்குக் கொண்டுவந்துவிட்டார்கள் - இணையத் தளத்தில் செருப்பால் அடிப்பேன் என்று எப்படிச் சொல்லலாம் என்று. உணர்ச்சிவசப்பட்டால் எப்படி என்று. செருப்பால் அடிப்பேன் என்றது கத்தியால் குத்தியது மாதிரி என்றால், பீயள்ளுபவன் என்றது என்ன விதம்? அணுகுண்டு போட்ட மாதிரியா? திருவாளர் நாகரீகம் அணுகுண்டு போட்டால் ஓக்கே, ஏன் போட்டே என்று பதிலுக்குக் குத்தினால் காட்டானா? ஏதோ மேம்போக்காகச் சொன்னதில்லை திருமாவளவனும் "அள்ளுவது". உள்ளே இருக்கும் வக்கிரம்தான் தன்னையறியாமல் வெளியே வருகிறது - பதிலுக்குக் கடித்துக் குதறினால் மட்டும் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது எல்லாருக்கும். போங்கய்யா, முதலில் உங்க முதுகைச் சுவற்றில் தேயுங்கள் முதலில்.

கணேசன், ரோஸாவசந்த் அங்கே அப்படித் திட்டினார், இங்கே இப்படித் திட்டினார் என்கிறீர்களே? சுனாமி பற்றி ஒரு அரைவேக்காட்டுத்தனமான பதிவில் உங்கள் கோபமான பின்னூட்டத்தை ஒருவர் நீக்கவில்லை? "நீங்கள் மனிதரே கிடையாது" என்றிருந்ததற்கே அவர் நீக்கிவிட்டார் என்று ஒரு பதிவு வேறு இட்டிருந்தீர்கள்? அப்போது வந்த உங்கள் கோபம் நியாயமானது தானே? இப்போது செருப்பாலடிப்பேன் என்று ரோஸாவசந்த் சொன்னது மட்டும் எந்த விதத்தில் வித்தியாசம்? "செருப்பு" என்ற வெறும் வார்த்தை மட்டுமேவா? உங்கள் கருத்தை நீங்கள் சொல்கிறீர்கள், அதை நான் குறைசொல்லவில்லை; அதற்காக "போ, போய் அள்ளு" என்பவர்களை மேளதாளத்துடனா வரவேற்கமுடியும்?

3/17/2005 7:00 AM  
Anonymous Anonymous said...

ரோஸா வசந்த்,

காஞ்சி பிலிம்ஸ்-தாசு விஷயத்தில் உங்களுடன் முழுக்க உடன்படுகிறேன். காஞ்சி பிலிம்ஸின் இந்த பதிவைப் பார்த்ததில்லை. நீங்கள் கொடுத்த சுட்டியைப் பார்த்த உடனே கூட காஞ்சி பிலிம்ஸ் என்ன சொல்கிறது என்று என் மரமண்டைக்குப் புரியவில்லை. தாசுவின் ஒற்றை வரியையும் நான் புரிந்து கொள்ளவில்லை.

வலைப்பதிவுகளை கடந்த ஒன்றரை மாதங்களாகத்தான் படிக்க ஆரம்பித்தாலும், நான் அதிகம் படிப்பவனில்லை, பின்னூட்டம் எழுத நேரமுமில்லை. விவாதத்தைத் தொடரவும் நேரமில்லாதபடியால் வலைப்பதிவுகளின் பக்கம் வரவே பயப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதனால் நான் எல்லோருடைய எல்லாப் பதிவுகளையும் படிக்காததால் பதிவர்களையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

தாசுவின் பதிவில் இந்திப் பிரச்சினை பற்றி நான் எழுதியது கூட அதே பிரச்சினையில் என்னுடைய கருத்துக்களைப் படித்த ஒரு திண்ணை வாசகர் மின்னஞ்சல் அனுப்பியபின்னால்தான். அப்பதிவில் பின்னூட்டம் எழுதியதால் எனக்கு விவஸ்தையில்லை என்று ஒற்றை வரியில் முன்பின் அறியாத நீங்கள் கடிந்து கொண்டது வியப்பாககூட இருந்தது. இப்பொழுது நன்றாகப் புரிகிறது நீங்கள் ஏன் அப்படி கோபமடைந்தீர்கள் என்று. தாசு ஏதோ அறியாமையால் பேசுகிறார் என்று எண்ணி அவருக்கு விளக்கிக் கொண்டிருந்தேன். அவர் மற்ற பதிவுகளில் என்ன எழுதுகிறார் என்று எனக்குத் தெரியாததுதான் காரணம். காஞ்சி பிலிம்ஸின் சில பதிவுகளையே படித்ததனால் அவர் எழுதுவது மீதும் முழுவதும் உடன் படாவிட்டாலும் மதிப்பு வைத்திருந்தேன். அவர் இடஒதுக்கீடு பற்றியும், தலித்து எழுச்சியைப் பற்றியும் எழுதியவற்றை நீங்கள் இப்பொழுது வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கு நன்றி. அவர் பதிவு பக்கமே தலை வைத்துப் படுக்க வேண்டியதில்லை, என் நேரம் மிச்சம்.

ஒற்றை வரிகளில் எல்லோரையும் (என்னை உட்பட) இனி நீங்கள் விமர்சித்தால் வியப்படைய மாட்டேன். அதற்கெல்லாம் நீங்கள் நீண்ட விளக்கம் அளிக்க வேண்டாம். ஆனாலும் செருப்பால் அடிப்பேன் என்று சொல்லும் பொழுது மட்டும் சின்ன விளக்கம் அளித்தால் நல்லது :-) நாங்களும் சேர்ந்து கொள்ளலாம் அல்லவா?

நன்றி - சொ.சங்கரபாண்டி

3/17/2005 7:07 AM  
Blogger -L-L-D-a-s-u said...

காஞ்சி ஃபிலிம்ஸ்ன் படங்களை பார்க்கும்போது 'தம் இன மக்கள் மலம் சுமக்கும் கொடுமையில்
இருக்கும்போது அதனை கவனியாது, திருமா தன் இன விரோதியாய் உள்ள ராமதாசோடு திறிகிறார் பார்' எனக்கூறுவதகத்தான் எனக்கு தோன்றியது . இந்த காமென்ட் அதற்குதான் . இது திருமாவை தவிர்த்துயாரையும் , எந்த இனத்தையும் கேவலப்படுத்தியல்ல .

இது ஒரு இனத்தை கேவலபடுத்துகிறது என நீங்கள் கூறினால் , அந்த எண்ணம் வருமளவுக்கு என் காமென்டுகள் இருந்ததற்காக ( அந்த நோக்கம் இல்லையென்ராலும்) நான் மன்னிப்பு கோருவதில் வெட்கப்படவில்லை . ஆனல், திருமாவை, என் தலைவனை, நீ எப்படி இவ்வாறு கூறலாம் என நீங்கள் கேட்பீர்கள் என்றால் ... நான் எத்தனை முறை வேன்டுமானாலும் இதை திருப்பி கூறுவேன் .

ராமதாஸால் கொல்லப்பட்ட தாழ்த்தபட்ட சகோதரர்கள் எத்தனை பேர்?.. அவரோடு சேர்ந்து ஓட்டு வேட்டையாடும் திருமாவை வேரென்ன சொல்வது?

'மலம்' அள்ளும் உருவகம் முதல் படத்தினால் வந்ததுதான் ..ஜாதி பார்த்து வந்தது அல்ல .

ராமதாஸோடு இல்லாத திருமாவை மதிக்கிறேன்,,, ராமதாஸொடு யார் சேந்தாலும் எனக்கு கவலையில்லை .. திருமா சேர்ந்து திரிகிற போது கோபம் வருகிறது....அதற்கான நியாயமும் என்னிடம் உள்ளது .

3/17/2005 8:48 AM  
Blogger ஒரு பொடிச்சி said...

This comment has been removed by a blog administrator.

3/17/2005 9:26 AM  
Anonymous Anonymous said...

//'பாப்பான்' என்று சொன்னால் இவருக்கு பொத்து கொண்டு வரும், ஆனால் தலித்தை ஒருவர் கீழ்தரமாய் வர்ணிப்பதை பார்த்து கண்டனம் தெரிவிப்பது இவருக்கு கண்ணை உறுத்துகிறது//

Idhaiyae ungalukku vice-versa-vaaga solla virumbugirom roza

3/17/2005 9:32 AM  
Blogger ஒரு பொடிச்சி said...

"இப்படி ஒரு கருத்தை ஒரு அரேபியரையோ, கருப்பரையோ ஃபிரான்ஸ் போன்ற ஒரு நாட்டில் (மேற்கின் எல்லா நாட்டிலுமே) யாரேனும் முன்வைத்திருந்தால் பெரிய பிரச்சனையாய் வெள்ளையர்களாலேயே மாற்றப்பட்டிருக்கும்."
நிச்சயமா. பகிரங்க மன்னிப்பு, ராஜினாமாவும் சாத்தியம், பொதுஊடகங்களில் முடிந்தவரை கண்டிப்பு. இனத்துவேசம் இருந்தாலுங்கூட இதை ஊடகங்கள் செய்தே ஆகவேண்டி கறுப்பர்கள் அழுத்தங்கொடுப்பார்கள்.

'செருப்பு' எல்லாம் ஒரு எதிர்ப்பா?
'பார்ப்பாரப் புத்தி' என்று திட்டுவதையும் 'பறப் புத்தி' என்று திட்டுவதையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்தால் இரண்டுமே தவறாய்த் தெரியும். மிகவும் முற்போக்கான பார்ப்பனர்களே இந்த 'திட்டுதலில்' sensitive ஆய் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது. இங்கே சமயம் கிடைக்கும்போதெல்லாம் வெள்ளையர்களை தமது பாடல்களில், எழுத்தில் கறுப்பர்கள் திட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள், இருப்பார்கள். தங்களை ஆண்டதன்மீதான எதிர்ப்பு அத்தனை சுலபமாய் போகாது. அவர்கள் திட்டுகிறார்கள் என்றுவிட்டு வெள்ளையர்கள் 'நீக்ரோ' என்றோ வேறென்ன சொல்லியோ கறுப்பர்களை திருப்பித் திட்டி 'சமன்' செய்ய முடியாது. இரண்டு வேறுபட்ட தட்டுகளாய் வைத்திருந்தவர்களை(வைத்திருப்பவர்களை) அவ்வளவு சுலபமாய் 'நாங்கள் இனிமேல் சமம்' என்றுவிட்டு திட்டாமல் இருக்கமுடியாது. இங்கே அடிமைத்தளைகள் போனபின்னாலேயே இந்த நிலமை இருக்க, எமது ஜாதி வேறுபாடுகள் 'இன்னும் இன்னும்' அப்படியே இருக்கையில் 'பார்ப்பானைத் திட்டினால் உறைக்காது ஆனால் மற்றவனைத் திட்டினால் உறைக்குது' என வாதாடுவது ரெண்டுக்குமான வேறுபாடுகளை விளங்க விரும்பாமையின் விளைவுதான். பூஜை செய்பவன் என்று திட்டுவது அவமானமா? மலம் அள்ளுபவன் என்று திட்டுவது அவமானமா என்பதை அப்படி வாதாடுகிற ஒவ்வொரு நாகரீக நபர்களும் கேட்டுக்கொள்ளுங்கள்! அப்புறமும் இதே வாதங்கள் வந்தால் யாருமே உங்களை அசைக்க முடியாது.

உயர்வகுப்புகளில் 'கறுப்பு' என்று திட்டிய ஆசிரியர்களை 'கெட்ட வார்த்தைகளால்' மாணவர்களும்கூட இங்கு எதிர்க்கிறார்கள், எதிர்ப்பார்கள்.
personal abuses ஐ போடவேணாம் என கூற முதல் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தைப் பற்றிய வசையை எதிர்க்கத்தெரியவேண்டும். அதை ஒருபோதும் செய்யாத, செய்யத் தோணாத, 'நம்மைத்தவிர'வேற ஒன்றையும் சிந்திக்காத, சுரணையற்ற 'நாகரீகமான' பாசாங்குகள்/மெளனங்கள் ஆபத்தானவை. காஞ்சி பிலிம்ஸ் பெரியாரை எடுத்துப்போட்டபடியே மணியம்மையாரை 'வப்பாட்டி' எனத் திட்டுகிற, வசையாடுகிற பின்னூட்டத்தையும் 'மெளனமாக' விட்டுவிடுகிறார். ஒரு பெண்ணை இப்படி 'மரியாதையாக' எழுதுவது என்பதைக் கூட எதிர்க்கத் தோணவில்லை. அப்புறம் பெரியரரிடம் அல்லது பெரியாரியத்திடம் என்னத்தை கற்றார் இவர்?
திருமாவளவன் பற்றிய இந்தப் பதிவிலுங்கூட இவரது நோக்கம் தவறாய் இருக்கவேண்டியதில்லை என்று பார்த்தால் தாஸ் பின்னூட்டத்தை 'மெளனமாக' இருந்துவிட்டு, உடனடியா ரோ.வசந்திற்கு எதிர்ப்பாய் எழுதுகிறார் (அதுவும் தலித்துகளிற்கு சார்பாய் எழுதுகிறேன் என்கிற தொனியில்). இவர்களிடம்
தலித்திற்கு எதிராக 'உள்நோக்கம்' இல்லை என்று சொன்னாலும் வாசிக்கையில் கா.பிலிம்ஸின் பதிவுகளில அது தென்படவில்லை.

3/17/2005 9:36 AM  
Blogger இளங்கோ-டிசே said...

ரோசாவசந்த்,
நான் சொல்லவிரும்பிய சில விடயங்களை பொடிச்சி மேலே விரிவாக ஏற்கனவே சொல்லிவிட்டார்.
........
இப்படிச் சொல்பவர்கள் முதலில் ஒன்றைச் சொல்வதையும் பிறகு தமக்கேற்றவாறு வாதங்களை திரிப்பதையும் எத்தனை முறை கண்டு சலித்தாயிற்று. கண்டனம் என்பதை சம்பிராதமாகிப்போய்விட்டதால், சுந்தரமூர்த்தி சொன்னதுபோலத்தான் இவர்களுக்குச் செய்யவேண்டும்.

3/17/2005 12:05 PM  
Blogger ROSAVASANTH said...

நான் எழுதியதில் வந்துவிட்ட ஒரு முக்கியமானா தவறு குறித்து ஒரு அவசரமான பின்னூட்டம் இது. காஞ்சி ஃபிலிம்ஸ் சொன்னது.

"//தவறு 1: காஞ்சி படம் போட்டது (அவர் திருமாவை அணுகியிருக்கலாம். அவரின் பதிவு ஏதோ தம்பி "திருமா" தெரிந்தே செய்வது போல் உள்ளது)//

காஞ்சி படம் போடவில்லை ஐயா. இந்த வார "TIME" European Editionல் வெளி வந்த படத்தைத் தான் scan செய்து போட்டேன்.என் நாட்டின் மக்கள்தொகையின் 15% தீண்டதகாத மக்கள் எல்லோரும் மலம் அள்ளுவதாக சித்தரிக்கும் அந்த புகைப்படத்தை கண்டு என்னால் சகிக்க முடியவில்லை. உடனே என்னுடைய கோபம் சாதியின் மீதும் அதையே அடையாளமாக வைத்து சாதி அரசியல் செய்யும் தலைவர்களின் மீதும் பாய்ந்தது. அந்த நேரத்தில் என் கண்ணில் பட்டது "இந்தியாடுடே"வில் வந்த நம்ம மூன்று நாயகர்களின் வாள்யேந்தும் புகைப் படம். அதையும் scan செய்து போட்டேன். அவ்வளவுதான் வெடித்தது பூகம்பம். பூகம்பத்திற்கு காரணமான "THE DIRTIEST WORK - Women in Bihar, one of the poorest states, carry away the contents of latrines. Only members of the untouchable caste perform that low-paying task" வசனத்தை நான் தான் இந்த மூவரும் சேர்ந்து "banner" பிடிப்பது போல் போட்டுவிட்டென் என்று நம்ம ரோசாவசந்திற்கு கோபம் வந்துவிட்டது. அந்த வசனம் "TIME" பத்திரிக்கையில் அந்த புகைபடத்துடன் வந்த வசனம்.

உண்மையான "தலித்" விடுதலைக்கு இன்னும் வெகு தூரம் இருக்கும் இந்த வேளையில், எந்த சாதியினரால் "தலித்துக்கள்" ஒடுக்க படுகின்றார்களோ அந்த சாதி தலைவர்களுடன் "அரசியல் லாபத்திற்காக" உறவாடும் திருமாவை பார்த்து தாசும் கோபமாக போட்டுத் தாக்கிவிட்டார்
அண்ணன் ரோசா அவர்கள் எப்பொதும் போல தான் மட்டும் தான் இந்திய தலித்துகளையும் அதன் தலையையும் காப்பதுபோலவும், நான் எதோ ரிசெர்வேஷன் எதிர்ப்பு முகாமின் தலைவன் போலவும் போட்டு தாக்குகின்றார்.

சாதிகளும், மதங்களும் அதன் அடையாளங்களும் அழிய வேண்டும். அதில் ரிசெர்வேஷனை மட்டும் காப்பாற்றவேண்டும் என்பது முடியாமல் போகலாம். "சாதி சான்றிதழ்" என்னும் கேவலம் ஒழிக்கப்பட்டே ஆகவேண்டும். இவன் இன்ன சாதி என்று சொல்வது கிரிமினல் குற்றமாக ஆக்கப்படவேண்டும். ஏழை அல்லது பெண் என்ற ஒரே ரிசெர்வேஷன் தான் இருக்க வேண்டும். கோவில்களையும் பூசாரிகளையும் ஒழித்தே ஆகவேண்டும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் படிப்பிற்கு பிறகு கண்டிப்பாக மூன்று வருடம் கடை நிலை "சிப்பாய்யாக" இராணுவத்தில் கடமை புரிய வேண்டும்.
இவற்றையெல்லாம் நான் சொல்வதால் என்ன பட்டம் வேண்டும் என்றாலும் எனக்கு ரோசா கொடுக்கட்டும், பரவாயில்லை."

நான் பதிலாக எழுதியது

"காஞ்சி ஃபிலிம்ஸ், உங்கள் நிதானமான பதிலுக்கு நன்றி!

TIME பத்திரிகையில் வந்த ஒரு படத்தை நீங்கள் அப்படியே போட்டத்தை விளங்கி கொள்ளாமல், அந்த படம் உங்களால் உருவாக்க பட்டது என்று தவறாய் எடுத்து கொண்டு நான் எழுதிய அத்தனை விமர்சனத்திற்கும் மனப்பூர்வமான மன்னிப்பை கேட்கிறேன். நான் அதை கவனிக்கவில்லை. அது என் தவறுதான். அது குறித்து நான் எழுதியுள்ள கருத்துக்களை திரும்ப பெற்று கொண்டு மன்னிப்பு கேட்பதுடன், மற்றவர்களும் இதை அறியும் வகையில் என் பதிவிலும் இதை இடுகிறேன். மீதி விமரசனம் இன்னும் கொஞ்ச நேரத்தில்."

3/17/2005 12:18 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

பதிவைப் படித்துவிட்டுப் பின்னூட்டம் எழுதவென்றால் ஏற்கனவே எழுதியவர்களைவிட நானென்ன புதிதாகச் சொல்லிவிடப் போகிறேன் என்று தோன்றுகிறது.ரோசா சொன்ன கருத்தில் தாஸ் பதிலளித்திருப்பின்(இல்லையென்று அவர் மறுத்தாலும்) அதை கண்டிக்கிறேன்.ராமதாசுடன் திருமாவளவன் சேர்ந்துகொண்டு தமிழ்ப்பெயர் அது இது என்று அவரது இழுப்புக்கு இழுபடுவது வருத்தமே.

3/17/2005 1:44 PM  
Blogger ROSAVASANTH said...

எதிர்வினைகளுக்கு பதில் எழுத போவதில்லை என்று முடிவு செய்தாலும் முடிவதில்லை.

முதலில் பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி. குறிப்பாய் தங்கள் கண்டனங்களை பலர் வெளியிட்டுள்ளது மிகுந்த நம்பிக்கையே ஏற்படுத்துகிறது.

தங்கமணிக்கும், மயிலாடுதுறை சிவாவிற்கும் என் மன்னிப்பை கேட்டுகொள்கிறேன். நீங்கள் காஞ்சியின் கருத்துக்களை ஆதரிப்பதாக நான் சொல்லவரவில்லை. காஞ்சியின் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான, மற்றும் திருமாவளவனின் அரசியல் குறித்த அரைவேக்காட்டு விமர்சனங்களை புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றியதால் எழுதினேன். மற்றபடி நான் உட்பட, எல்லோரும் எதோ ஒரு சமரச சமன்பாட்டை கையில் வைத்துகொண்டே செயல்படுகிறோம். அதில் உங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தில் மூக்கை நுழைத்ததற்கும் மன்னிக்கவும்.


அடுத்து பாலாஜி எதிர்பார்த பதிலை பிசகாமல் தந்துள்ளார். மிக தெளிவாக அவர் என்ன சொல்லபோகிறார் என்று தெரிந்ததனாலேயே நான் 'பாப்பார லாஜிக்' என்று எதை சொல்கிறேன் என்று நேரடியாய் எடுத்து சொல்லி அவரை எதிர்கொள்ள கேட்டுகொண்டேன்.

அதாவது "ரவி ஸ்ரீனிவாஸ் சுஜாதாவை (கவனிக்கவும், முட்டாள் என்பது சாதியுடன் தொடர்புடைய விமரசனம் அல்ல, முழுக்க சுஜாதாவின் எழுத்து குறித்த ஒரு கருத்தாய்) 'முட்டாள்தனமானது' என்று சொன்னதற்கு ஆத்திரப்பட்டீர்கள். இப்போது ஒருவர் தலித்தான திருமாவளவனை சாதியை முன்வைத்த விமர்சனமாய் 'மலம் அள்ளும்' உவமை போட்டு பேசுகிறார். அதை நியாயப்படுத்துகிறீர்கள். அதை கண்டித்த என்னை கண்டிக்கிறீர்கள். இப்படி பாப்பானுக்கு ஒரு நியாயம், தலித்துக்கு இன்னோரு நியாயம் என்பதையே 'பாப்பார லாஜிக் என்கிறேன்" என்று குழந்தைக்கும் புரியும் வகையில் விளக்கி எதிர்கொள்ள கேட்டேன். இதை அவர் எப்படி எதிர்கொண்டிருக்க முடியும்? உதாரணமாய் தான் அப்படி லாஜிக் போடவில்லை என்றோ, நான் சொன்னது போல் சுஜாதாவுக்கு ஒரு நியாயம், திருமாவுக்கு ஒரு நியாயம் என்றுதான் சொல்லவில்லை என்றோ, இன்னும் வேறு வகையிலோ கையில் விஷயம் இருந்தால் எதிர்கொண்டிருக்க முடியும். ஆனால் அவர் எப்படி எதிர்கொள்ளுகிறார்.

"திருமா தலித் எழுச்சிக்கு பாடுபட்டவர் தான், சந்தேகமில்லை. அவரை திட்டியதை தட்டிக் கேட்கும் நீங்கள் மிகச் சிறந்த சாதனையாளரான வைரமுத்துவை (அவரும் தமிழுக்கு ஒரு வகையில் பெரிய சேவை செய்தவர் தான்) தரக்குறைவான முறையில் 'நாய்' என்று திட்டுவதோடு அல்லாமல், அதை சுட்டிக் காட்டியபோதும், தவறு என்று ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், இன்னபிறரை வேறு விடயங்களில் 'வருத்தம் தெரிவிக்கவில்லை' என்று குற்றம் சாட்டினீர்கள்! இதை 'சாத்தான் ஓதிய வேதம்' இல்லாமல் வேறென்ன சொல்வது???

எதற்கெடுத்தாலும், 'தர்க்க ரீதி'யாக எதிர்கொள்ளும்படி பிறருக்கு அரைகூவல் விடுவது, நீங்கள் என்னவோ 'தர்க்கத்தின் தலைவர்' (king of logic) என்ற உங்கள் மனநிலையின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. இதை சற்று குறைத்துக் கொண்டால் நல்லது. "
இதற்கு முந்தய பதிலில் வேறு ஒரு சம்பந்தமில்லாத ஒன்றை சொன்னார். இப்போது இது. இப்படி குண்டக்க மண்டக்க பேசி திசை திருப்புவது என்ன லாஜிக் என்று அவரவர் முடிவுக்கு வரலாம். (கவனிக்கவும், இதை நான் பாப்பார லாஜிக் என்று சொல்லவில்லை.)

அடுத்து அவர் சொல்லாமல் சொல்வது. திருமாவை பற்றி 'மலம் அள்ளும் உவமை' போட்டு பேசவதில் *எந்த தவறும் இல்லை*, ஆனால் பாப்பார லாஜிக் என்று சொன்னால் அது, "வக்ரம், வன்மம், பார்பன துவேஷம்" இதை பாப்பார லாஜிக் என்று சொல்லாமல் எப்படி சொல்லலாம் என்று சொல்லுங்களேன், கணேசா! இதைத்தான் முன்னமேயே கூட கேள்வியாய் கேட்டிருந்தேன். இதை சொன்னால் முரண்பாடாய் தெரிகிறதா?

அடுத்து அவர் சொல்வது போல் யாரையும் நான் தர்க்கபூர்வமாய் எதிர்கொள்ளும்படி கேட்கவில்லை. 'தர்க்கபூர்வமாய்' எதிர்கொள்வதில் உள்ள பிரச்சனைகளையே மீண்டும் மீண்டும் பேசி வருகிறேன்.

மனிதன் என்பவர் நேரடியான வசை வார்த்தைகளுடன் பின்னூட்டம் அளித்து அவரே நீக்கிவிட்டார். (அப்போது நான் தூங்கிகொண்டிருந்தாலும் அந்த பின்னூட்டம் மின்னஞ்சலாய் என்னிடம் உள்ளது.) அவர் முன்வைத்தது நேரடியான ஒரு மனவக்கிரம். ஆனால் அதைத்தான் பாலாஜியும் கணேசனும் டீஸண்டானா வார்த்தைகளில் சொல்லுகிறார்கள்.

தாஸ் முன்னால் எழுதியதற்கும் சரி, இப்போது எழுதியதும் சரி, சந்தேகத்தின் பலனை அளித்தால் அவர் முதிர்ச்சியின்மை அல்லது அறியாமை காரணமாய் எழுதுவதாய் எடுத்துகொள்ள கூட முடியும். (முதிர்சியினமையையும் அறியாமையும் காரணம் காட்டி எல்லா விஷயங்களையும் மன்னித்துவிட முடியாது என்றே நினைப்பதாலேயே, அதையும் கண்க்கில் கொண்டே இந்த பதிவு.) எனக்கு தாஸிடம் இருப்பது மொழிபுரியாத சிக்கல். ஆனால் இதில் கூட புரிந்து கொள்ள ஆர்வம் இருந்தால் உரையாடமுடியும். ஆனால் பாலாஜியும், கணேசனும் மொழி புரியாதது போல நடிப்பவர்கள். மீண்டும் மீண்டும் நான் எடுத்து சொன்னாலும், சொன்ன விஷயம் புரியாதது போல, சொன்னதையே அல்லது சம்பந்தமில்லமல் வேறு எதையாவதோ சொல்ல போகிறார்கள்.
பல்லாயிரக்கணகான மக்களின் சோகத்தை கொச்சைபடுத்தி ஆபசமாக்கிய கோபத்தில் வைரமுத்துவை 'நாய்' என்று அந்த கண கோபத்தில் என் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதனுடன் முரண்பட, அதை விமர்சிக்க கண்டிக்க எல்லோருக்கும் உரிமையுண்டு. ஆனால் 'சிம்புவின் ஆண் குறி' விஷயம் பற்றி பேசும் அத்தனை ஆணாதிக்க வக்கிரங்களும், அதற்கு பின்னால் நான் அளித்த தர்கத்தை எதிர்கொள்ளமலே பேசியுள்ளன. அதை கேள்வி கேட்ட அத்தனை பேரும் 'பெண்களை கொல்ல வேண்டும்' என்ற சிம்புவின் நியாயத்திற்கு வக்காலத்து ஏதோ விதத்தில் வாங்குவதை கவனிக்க வேண்டும். ஆகையால் கணேசன் கவனிக்க வேண்டும். நிருபாவின் பதிவில் எழுதியதில் இருந்

"இங்கே வலைப்பதிவிலேயே, முதிராமை போன்ற காரணங்கள் இல்லாமல், மன்மதன் படம் சுயநினைவுடன் நியாயபடுத்த பட்டதை கவனிக்க வேண்டும். 'குற்றவாளி தண்டனி பெறவேண்டும் என்றெல்லாம் நியாயம் கற்பித்து முடிக்காதது சிறந்தது' என்று விமரசனமே வந்துள்ளது. .....

இதில் வேறு சிலர் 'பரபரப்பையும் கவனைத்தையும் பெற ஆண்குறியை வெட்டவேண்டும்' என்று எழுதுவதாக எழுதியிருந்தார்கள். ஒரு பேச்சுக்கு அப்படியே வைத்து கொள்வோம். அதாவது வலைப்பதிவில் படிக்கும் சுமார் 100பேரின் கவனத்தை கவர அப்படி தலைப்பு வைத்ததாக வைத்துகொள்வோம். ஆனால் அப்படி எழுதுபவர்களுக்கு, ஒரு படம் ஓடவும் பணம் பண்ணவும் பெண்களை கொல்லவேண்டும் என்ற கருத்தை தர்மமாய் வலியுறுத்தும் படத்தை விமர்சனமாய் சொல்ல எதுவும் இல்லை. (படத்தை பற்றி விமர்சனமாய் எழுதிய சிலரும், இந்த பிரச்சனையை விட்டுவிட்டு நடிப்பு போன்ற மற்றதையே விமர்சித்திருப்பதை கவனிக்க வேண்டும்.)

என்னை பொறுத்தவரை நோய் சிம்புவைவிட இவர்களிடமே உள்ளது. சிம்புவிற்கு படம் ஹிட்டாவதும் பணமுமே முக்கியம். ஒருவேளை 'ஆண்களை ஏமாற்றி பெண்கள் கொல்வதை' வைத்து கதை எழுதினால் ஓடும் என்றால் அதை கூட அவர் எடுக்க கூடும். உண்மையில் அவர் கருத்து கூட வேறாக இருக்கலாம். நமது பாதி நட்டிகர்களும், இயக்குனர்களும் தங்கள் பார்வைக்கு மாறாகவே நடிக்கிறார்கள். அதனால் நோய் வலைப்பதிவிலும் மற்ற இடத்திலும் படத்தை பாராட்டியோ விமர்சனமில்லாமலோ சுய நினைவுடன் எழுதியவர்களிடமே உள்ளது. அதில் சிலரின் குறியை அறுப்பதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது."


மீண்டும் காஞ்சி ஃபிலிம்ஸ் எழுதியதில் தகவல்ரீதியாய் நான் இழைத்த பிழைக்கு மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். ஆனாலும் என் விமரசனம் TIMEற்கு அப்படியே பொருந்தும். அதை ஒப்புகொள்வதாலேயே காஞ்சி அதை ஸ்கேன் செய்தி வெளியிட்டு 'நோ கமெண்ட்ஸ்' சொல்கிறார். அதை அவருடைய கருத்தாகவும், தொடர்ந்து அவர் திருமா மீது வைத்துஇ வரும் விமர்சனத்தை பார்க்கும்போது நான் சொன்னதன் ஒரு பகுதி அவருக்கும் பொறுந்தும். அடுத்து நான் சொல்ல வேண்டியதை பொடிச்சி சொல்லியிருக்கிறார்.(அதாவது காஞ்சி தாஸுடன் ஒத்து போவது அதற்கு வக்காலத்து வாங்குவது, மீண்டும் வலியுறுத்துவது etc) அதற்கு அவருக்கு நன்றி, மாண்ட்ரீஸரும் நான் சொல்ல விரும்பிய சில விஷயங்களை அவர் மொழியில் சொல்லியுள்ளார். அதை மீண்டும் சொல்லாமல் அவருக்கும் என் நன்றி.

அல்வாசிடி விஜய்க்கு,

//ஒருவரின் எழுத்துக்களை மட்டும் படித்து அவர் என்ன மனநிலையில் எழுதினார் என்பது அறிதல் மிக கடினம். //

ஆமாம், அதனால் சந்தேகத்தின் பலனை சிலருக்கு தரமுடியும். அவர் தான் சொல்ல வந்ததை தெளிவாக்கினால் நம் புரிதலை மாற்றிகொள்ள முடியும். அவரே தெளிவாய் என்ன சொல்ல வந்தார் என்று விளக்கிய பின்னும் அவர் வேறு ஏதோ சொல்லியிருக்க கூடும் என்று எடுத்துகொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பது நியாயமல்ல.

//ஒருவர் தலித்துக்களுக்கு அல்லது மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு ஆதரவாக எழுதினால் அது ஒரு எழுச்சியாக கொள்ளப்படுகிறது ஆனால் அதுவே ஒரு பார்ப்பனர் தன் சமூகத்துக்கு ஆதரவாக பேசினால் ஏன் ஆதிக்கமாக கருதப்படுகிறது?//

என்ன கேள்வி இது? ஏழைகளுக்கு ஆதரவாக பேசுவதும், பணக்காரருக்கு ஆதரவாக பேசுவதும் ஒன்றா? ஏழைகள் பணக்காரரகலை எதிர்பது ஏன் எழுச்சி, பணக்காரர்கள் அதை வன்முறை கொண்டு அடக்குவது ஏன் ஆதிக்கம் என்று வேண்டுமானால் கேட்டு பாருங்களேன்.

//ஆதிக்கம் செலுத்திய காலமெல்லாம் மலையேறிவிட்டது.//

பச்சையான பொய் இது. மிக பெரிய அளவில் எல்லா துறைகளிலும், கருத்துருவ ரீதியிலும் இருப்பதுதான் யதார்த்தம். நீங்கள் உதாரணத்துடன் பேசினால் என்னாலும் பேச முடியும்.

//ஒரு இனத்தை இழிவாக திட்டினார் என்று தனிபக்கம் எழுதும் திரு ரோசா அவர்களே இத்தனை நாள் "காஞ்சி மலம்" இந்து மதத்தின் நம்பிக்கை கடவுள்களை நக்கல்டித்து பல பதிவுகள் வெளியிட்டுள்ளார். அதை நீங்கள் கண்டித்துள்ளதாக நான் அறியவில்லை //

ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு அளவில் எதிர்வினை வைப்பது ஒவ்வொருவரின் பார்வையை பொறுத்தது. உதாரணமாய் காஞ்சி பார்பனர்களை திட்டினால் (திட்ட கூட இல்லை, பார்பனியத்தின் அழுகல்களாக தன் வாதமாய் சில வ்சிஹயங்களை சொன்னால்) உங்களுக்கு பொத்துகொண்டு வருகிறது. அவர் சொன்னதை நேரடியாய் எதிர்கொள்ளாமல் பொத்தாம் பொதுவாய் திட்டி 'சொத்தை ஃபிலிம்ஸ்' என்று பத்வு போடுகிறீர்கள். ஆனால் தலித்தை நேரடி வசை வார்த்தையால் திட்டினால் சம்பரதாயமாய் 'கண்டிக்க' கூடமனசு வராமல் 'அப்படி இருக்கலாம், இப்படி இருக்க கூடும்' என்று சப்பு கொட்டுகிறீர்கள். அப்படி இருக்கும் போது என்னிடம் இப்படி கேட்பது நியாயமா?

கவனத்தீர்களா தெரியவில்லை. திருவாசகத்திற்கு இளயராஜா சிம்பனி அமைத்தது குறித்து அவர் எழுதியதை கண்டித்திருக்கிறேன். மற்றபடி இந்து மதத்தின் அழுகல்களை அவர் எழுதியது சரி எனப்பட்டால் ஏன் எதிர்க்க வேண்டும்? தவறென படுவதை சுட்டி காட்டுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? அதை ஏன் என்னிடத்தில் எதிர் பார்கிறீர்கள்? இந்துமதம், பகவத் கீதை, மனுதர்மம் இதை முன்வைத்து காஞ்சி எழுதிய அனைத்தும் விவாத பூர்வமானது, அதில் நேரடியான வசையை நான் பார்க்கவில்லை(பார்த்தலும் எதை எதை கண்டிப்பது என்று எனக்கு ஒரு முன்னுரிமை இருக்கும்). அவ்வாறு எழுத அவருக்கு உரிமை உண்டு -அதை மறுக்க உங்களுக்கு இருக்கும் உரிமையை போல்!

//ஆனால் அவர் சில தலைவர்களை கிண்டலடித்ததை ஒரு இனத்தை கிண்டலடித்தாக கருதி பதிக்கிறீட்கள்.
//

மற்றவர்கள் வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் சொல்லும் அதே ஸ்டீரியோடைப் வாதத்தை முன்வைக்காதீர்கள். தலைவர்களை, அல்லது தனிப்பட்ட தலித்தை கிண்டலடித்தாலும், விமர்சித்தாலும், என்ன வார்த்தகளால் அது செய்யப்படுகிறது என்பதுதான் முக்கியம். அதைத்தான் மீண்டும் மீண்டும் நான் சொல்லிவருகிறேன். தனிப்பட்ட தலித்தை (அதைவிட முக்கியமாய் ஒரு பெரும் எழுச்சிக்கு காரணமான தலைவனை) நோக்கி (தலித்தாய் இருப்பதாலேயே வெளிவரும்) வசையை வீசிவிட்டு, 'தனிப்பட்ட ஒருவனை திட்டினால் அந்த இனத்தை திட்டியதாக அர்த்தம் அல்ல' என்று சொல்வது அயோக்கியத்தனம்!

//எனக்கு பல நாட்களாக ஒரு சந்தேகம். இந்த நாத்திகவாதிகள் ஏன் இந்து மதத்தை மற்றும் அதன் முறைகளை எதிர்க அல்லது நக்கலடிக்கிறார்கள்? நாத்திகம் வளர்க்க அதில் அப்படி ஒரு பிடிப்பான கருத்துக்கள் இல்லையா?//

100 வருடமாய் பதில் சொல்லி அலுத்துப்போன சமாச்சாரம் எனினும் சின்ன பதில். முதல் காரணம் நாம் நம்மை பற்றி, நம்மிடம் இருக்கும் அழுகலை பற்றி பேசிவிட்டு மற்றவரை பற்றி பேச வேண்டும் என்பது. அதாவது பேசும் அனைவரும் இந்துக்கள், அதனால் இந்துமததை பற்றி பேசுகிறார்கள். இரண்டு இங்கே பிரச்சனை ஆத்திக நாத்திகம் என்பதை விட, மதரீதியான நம்பிக்கையின் அடிப்படையில் நிறுவனரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், நியாய/தர்ம ரீதியாகவும் உறுதி பட்டிருக்கும் சாதியம். சாதியத்தை தாக்க அதற்கு ஆதரவாய் இருக்கும் மதரீதியான நம்பிக்கைகள், கற்பிக்க பட்ட நியாய/தர்மங்கள் இதனை உடைக்காமல் செய்யமுடியாது என்ற தெளிவின் அடிப்படையில் இது செய்யப்படுகிறது. இது சரியா என்று விவாதிக்கலாம். ஆனால் இப்படி அப்பாவியாய் ஒரு கேள்வியை நூறுவருடங்களுக்கு கேட்டு கொண்டிருக்க கூடாது.

இப்படி ஒரு வாதம், திசை திருப்பவும் பயன்படுத்த கூடும். அதை ஒரு விதத்தில் சுட்டி காட்டுபதுதான் இந்த பதிவின் நோக்கம். இது தவிர மற்ற மதங்கள் குறித்து நான் எழுதியிருக்கிறேன். ஆங்காங்கே பின்னூட்டங்களில் என் பதிவிலும். அது சந்தர்பங்களை பொறுத்தது, விஷயத்தின் தீவிரத்தை பொறுத்தது.

இது இப்படி இருக்க இந்துமதத்தை அதன் அரோக்கியமான அம்சங்களாய் சிலவற்றையும், அழுகிபோன அம்சங்களாய் சிலவற்றையும் நான் பார்கிறேன். அது குறித்து ஒரு தனி பதிவு நிச்சயம் வரும். மீதியை அப்போது பேசலாம்.

//பார்ப்பன ஆதிக்கம் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் எவரும் பிற்படுத்தப்பட்டவர்களால் இந்திய அரசியலில் உள்ள அசிங்கங்களை பற்றி எழுத மறுப்பது ஏன்?//

எக்கசக்கமாய் எழுதப்பட்டுள்ளது. இந்த வாதம் சொத்தையாய் பலமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நான் என் காதல் பட விமர்சனத்திலும் மற்ற இடங்களிலும் பேசியுள்ளேன். என் பதிவில் பின்னூட்டமளித்த நண்பர்கள் சுந்தரமூர்த்தி, சங்கரபாண்டி பல இடங்களில் எழுதியுள்ளனர். எழுத யாரும் மறுக்கவில்லை. இப்போது காஞ்சியை கண்டித்து எழுதியதும் இது போன்றதே!

நீங்கள் உளப்பூர்வமான ஒரு நேர்மையுடன் இப்படி கேள்விகளை எழுப்பியிருக்க கூடும் என்று கருதி இதை எழுதியுள்ளேன். ஆனால் ஏதோ ஜாதி என்று எதுவும் இல்லாதது போலவும், தலித் எல்லாம் முன்னேறிவிட்டதாகவும் பீலா விடாதீர்கள். திருநெல்வேலியில் எங்கே எந்த ஜாதி வசிக்கிறது என்பதெல்லாம் வரையருக்க பட்டவை (அதில் அப்படி இப்படி சில மீறல்கள் சமீபகாலமாய் ஏற்பட்டாலும்.) 'சக்கலிய குடி' என்று அழைக்கப்பட்டு எத்தனை இடங்கள் இருக்கிறது என்று தெரியாதது போல நடிக்காதீர்கள். எழுதும் போது சில விஷயங்கள் ஞாபகம் வராது. அல்லது ஞாபகம் வருவது வசதிப்படாது. அப்படியில்லாமல் எல்லாவற்றையும் நேர்மையாய் பேச முன்வந்தால், மாற்று கருத்தை ஒருவருக்கொருவர் மதித்து பேசமுடியும், நன்றி!

3/17/2005 2:12 PM  
Blogger ROSAVASANTH said...

மன்னிக்கவும் சம்மி, விஜய் என்று நினைத்துவிட்டேன்!

3/17/2005 2:14 PM  
Blogger ROSAVASANTH said...

கருத்து சொன்ன மெய்யப்பன், தான்யா, நாராயணான், சுந்தர்மூர்த்தி, பாஸ்டன் பாலாஜி, என்றென்றும் அன்புடன் பாலாஜி, மனிதன், குளவிகள், தங்கமணி, கணேசன், மயிலாடுதுறை சிவா, கருப்பி, மாண்ட்ரீஸர், சங்கரபாண்டி, தாஸ், பொடிச்சி, லொள்ளூ பிரசாத் யாதவ், பொடிச்சி, டீஜே தமிழன், சம்மி, ஈழநாதன் அனைவருக்கும் நன்றி.
கணடனங்களையும், நியாயமான கோபத்தை காட்டும் வாதங்களையும் பார்த்தபின், நேற்றய மனநிலையிலிருந்து இன்று மனம் நம்பிக்கையுடன் லேசாய் இருக்கிறது. அதற்கு காரணமான நண்பர்களுக்கு நன்றி. இந்த விவாதம் தொடர்ந்தால் என்னால் எதுவும் பதில் சொல்ல முடியாது. மற்றவர்கள் தாராளமாய் தொடரலாம். நன்றி!

3/17/2005 2:26 PM  
Blogger Vijayakumar said...

அய்யா!! அப்பப்போ அல்வாசிட்டி பக்கத்துல இருக்கிற பெயரையும் கவனியுங்க. இரண்டு பேர் எழுதுகிறோம் அல்வாசிட்டியில்.
சம்மி என்பவரும் என் நண்பனே. அவரும் அவ்வவ்ப்போது எழுதுகிறார்.

இந்த பதிவின் விவாதத்தை பொறுத்தவரை நான் வெறும் பார்வையாளனே. நல்லதும்/கெட்டதுமாக நிறைய கருத்துக்கள். கலகமும், எண்ணமும் நல்லிணக்கத்தில் முடிந்தால் சரி.

3/17/2005 2:43 PM  
Blogger ROSAVASANTH said...

நன்றி சம்மி, நன்றி விஜய். அடுத்த முறை பெயரில் கவனமாய் இருக்கிறேன்.

இது தொடர்பாய் கணேசன் அளித்த பதிவும், நான் அளித்த பின்னூட்டமும்..
http://kgans.blogspot.com/2005/03/blog-post.html

இத்தோடு ஜூட், இனி எந்த வித உந்துதலுக்கும் ஆட்பட்டு எழுதமாட்டேன். நன்றி!

3/18/2005 12:20 AM  
Blogger Narain Rajagopalan said...

//எனக்கு பல நாட்களாக ஒரு சந்தேகம். இந்த நாத்திகவாதிகள் ஏன் இந்து மதத்தை மற்றும் அதன் முறைகளை எதிர்க அல்லது நக்கலடிக்கிறார்கள்? நாத்திகம் வளர்க்க அதில் அப்படி ஒரு பிடிப்பான கருத்துக்கள் இல்லையா?//

வசந்தின் பதில் உங்களுக்கு தெளிவு படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன். அவ்வாறு இல்லாமல், மீண்டும் நீங்கள், ஏன் இஸ்லாமையோ, கிறிஸ்துவத்தையோ எதிர்க்கவில்லை என்கிற கேள்வியை மண்டையில் தேக்கி வைக்குமுன், இந்த புத்தகத்தை படிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

ஜீன் மெஸ்ஸியரின் "பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக குருவின் மரணசாசனம்" 3 பாகங்களாக வந்துள்ள இந்த நூலினை எழுதியவர் ஒரு கத்தோலிக மதகுரு. பெரியார் பதிப்பக வெளியீடாக வந்துள்ள இந்த நூலில் கிறிஸ்துவ குருமார்களும், தேவாலயங்களும் எப்படி அரசினையும் மக்களையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன என்பதைப் பற்றிய விரிவான பதிவு இது. இதை தாண்டியும் தெரிந்து கொள்ள விரும்பினால், மாலனின் ஜன்னலுக்கு வெளியேவில் இருக்கும் கருப்பை அரசியல் பற்றிய முழு பதிவினையும், புத்தரின் சங்கடங்களையும் படிக்கவும்.

3/18/2005 1:32 PM  
Blogger ஜோ/Joe said...

அல்வா சிட்டி அண்ணாச்சி,
நீங்கள் நினைப்பது போல பெரியாரும் அவருடைய இயக்கமும் வெறுமனே இந்து மதத்தை மட்டும் கேலி செய்யவில்லை .அவர்கள் மாநாட்டில் "பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா?" ," 876 அல்லா வீட்டு பூட்டு எண்ணா?" என்றெல்லாம் தட்டியில் எழுதி வைத்தது உங்களுக்கு தெரியாமலிருக்கலாம் .தி.க வெளியிட்ட பல பெரியார் கட்டுரை புத்தகங்களில் அவர் கிறிஸ்தவ ,இஸ்லாமிய மதங்களையும் சாடியிருப்பதை படித்திருக்கிறேன்.

3/18/2005 6:19 PM  
Blogger ROSAVASANTH said...

சம்மி, ஜோ கருத்துக்கு நன்றி!

அயலிலிருந்து...

மெய்யப்பன் மெய்யப்பன்: இந்தியாடுடேயில் வெளிவந்த புகைப்படத்தில் TIMEல் வந்த கறுப்புவெள்ளைப் படத்தின் வாசகத்தினை இநணைத்தது காஞ்சி பிலிம்ஸ்தான். எனவே அந்தக் கார்டூனை உருவாக்கியது காஞ்சி தான். இதனை இணைத்ததற்கான விம்ர்சனத்திலிருந்து காஞ்சி விலக முடியாது. ஒருவேளை ரோசாவசந்த் இதைத் தவறவிட்டுவிட்டாரோ என்றே இந்தப் பின்னூட்டம்.


மாண்ட்ரீஸர்: //நான் புரிந்து கொண்டது போலத்தான், நீங்கள் தாஸ் உடபட, அனைவருமே புரிந்து கொண்டிருக்கின்றனர். எல்லோருக்குமே கார்டூன் காஞ்சியால் உருவக்கப்பட்டதாகவே பட்டிருக்கிறது.//

ரோஸாவசந்த், கணேசன் இருவருக்கும், பொதுவாகவும் ஒரு சின்ன விளக்கம்: நான் டைம் பத்திரிகை சந்தாதாரன் என்பதால், ஜெஃப்ரி சாக்ஸ் எழுதிய வறுமை பற்றிய சென்றவார டைம் அட்டைப்படக் கட்டுரையையும், காஞ்சி ஃபிலிம்ஸ் இட்டுள்ள அந்தப் புகைப்படத்தையும், பேனரில் உள்ள வாக்கியங்களையும் முன்பே படித்துள்ளேன். முதலில் காஞ்சியின் பதிவைப் பார்த்தபோது பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. அடுத்து தாஸின் பின்னூட்டம் படித்து, சற்று நெருடினாலும், தேவையில்லாத விவாதம் என்று எதுவும் சொல்லவில்லை. அடுத்து ரோஸாவசந்த் கூறியதற்குப் பதிலாக, கடைசியாக காஞ்சி ஃபிலிம்ஸ் தனது பதிவில் இட்டுள்ள 'விளக்கத்தை' அப்போதே இடாமல், தாஸின் பின்னூட்டத்துக்கு வக்காலத்து வாங்குமாறு வேறொரு பின்னூட்டம் இட்டதில்தான் - தானாகத் திருகியிராவிட்டாலும்கூட, யாரோ திருகும்போது அல்லது திருகப்படுவதாகச் சித்தரிக்கப்படும்போது, நிலவரத்தைத் தெளிவுபடுத்தாமல் காஞ்சி தானும் ஒத்து ஊதியதுதான், தெரிந்தே செய்ததோ என்ற சந்தேகத்தை எழுப்பி எரிச்சலடைய வைத்தது. இந்த விளக்கத்தை முதலிலேயே கொடுத்திருந்தால் இவ்வளவு விவாதங்கள் இருந்திராது. நடந்துவிட்ட ஒரு விஷயத்தைவைத்து பொத்தாம்பொதுவாக குறிப்பிட்ட வலைப்பதிவுகளை profiling செய்வது தண்டமான/தேவையற்ற செயல் என்பதால், தாஸ் திருமாவளவன் பற்றி வேறேதும் குறிப்பிட்டிருக்கிறாரா, காஞ்சி ஃபிலிம்ஸ் எழுதுவதில் இருக்கும் உண்மைகளையும் பொய்களையும் பிரித்துப் பார்க்கவேண்டுமா என்ற கேள்விகளெல்லாம் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. இஷ்டமிருப்பவர்கள் தேடிப்பார்த்துக்கொள்ளலாம்.

எனக்குத் தெரிந்து, வெகு சில சந்தர்ப்பங்கள் தவிர, இதுவரை எந்த வலைப்பதிவர்களையும் குறிப்பிட்டு நான் விமர்சித்து எழுதியதாக நினைவில்லை - தவிர்க்கமுடியாமல் போனால் தவிர. தோன்றியதை எழுத அனைவருக்கும் உரிமையுண்டு. எழுதட்டும். ஆனால், தன் சோற்றில் கைவைத்தால் சாப்பாடு, அடுத்தவன் சோற்றில் கைவைத்தால் கொள்ளை என்று புரிந்துகொள்ளும் அடிப்படை நாகரிகமாவது இருந்தாலே போதும்.


மெய்யப்பன், மாண்ட்ரீஸருக்கு என் நன்றிகள்.

வெங்கட்டின் பதிவில் நான் எழுதியது கீழே!

நிதானமாய் படிக்க என்னால் முடியவில்லை. மேலோட்டமாக படித்ததில் நான் எழுதிய எதையும் வெங்கட் மறுக்க முனைந்ததாகவொ, இந்த பதிவு அதற்கானதாகவோ தெரியவில்லை. அதனால் அதிகம் பேச இல்லை.

ஆனால் 'பாப்பான்' அடைமொழி போட்டு திட்டுவதற்கும், 'பறையன்' அடைமொழி போட்டு திட்டுவதும் ஒரே மதிரியான விஷயம் என்பது வெங்கட் சொல்வதன் பின்னுள்ள பொதுவான ஒரு வாதம். இது குறித்து ஆயிரம் முறை விளக்கம் அளித்தாலும் எதுவும் கணக்கில் எடுத்துகொள்ள படும் என்று தோன்றவில்லை.

ஒருவன் அலுவலகத்தில் திருடுவதை பார்த்து, அதை ஜாதி புத்தியாக பாப்பான்/பறையன் என்ற ஜாதி அடையாளத்தில் ஏற்றி சொன்னால் ஒருவேளை இரண்டும் ஒரே மதிரி என்று பார்பதில் லாஜிக் இருக்கிறது. (எனக்கு அப்படி தோன்றவில்லை, ஒரு தலித்தை சொல்வது இன்னும் அதிக காயத்தை வரவழைக்க கூடியது, இன்னும் ஆழமான நோயின் அறிகுறி என்று நினைக்கிறேன். என்றாலும் இரண்டுமே நியாயமற்றது என்று ஒப்புகொள்ள முடியும்.) ஒரு தலித் சாப்பிடும் விதத்தை கிண்டலடித்து மோசமான வசையால் ஒருவர் திட்டுகிறார், இன்னொரு சந்தர்பத்தில் ஒரு பார்பனர் சாப்பாடு விஷயத்தில் ஆசாரமான ஒன்றை கடை பிடிப்பதை ஒருவர் 'பாப்பார புத்தி' என்று திட்டுகிறார். இரண்டையும் ஒன்றாக பார்க்கவேண்டும் என்றால் ரத்தம் வர முட்டிகொள்ள மட்டும் முடியாது.

ஒருவர் மிக தெளிவாக திருமா மீதான ஜாதியை வசையை நியாயபடுத்துவதையும், அதே நேரம் சுஜாத எழுதுவதை (கவனிக்கவும், எழுத்தை மட்டும்) 'முட்டாள்தனமானது' என்று சொல்வதற்கு கோபம் கொண்டு குதிப்பதை பாப்பார புத்தி என்பதை தவிர வேறு எந்த வார்த்தையாலும் என்னால் விளக்க முடியாது. இதுவும் ஒரு ஜாதிய வசைதானே என்று சொல்லும் அறிவு கொழுந்துகள் நிறய இருக்கிறது. ஹிட்லர்தனமாய் ஒருவர் பேசுவதை 'நாஜிபுத்தி' என்று யாராவது சொல்வதும் இனவெறிதானே என்றும் சொல்லலாம். இப்படிபட்ட வாதங்களை எத்தனை முறை கேட்டாகிவிட்டது. இதையும் பாப்பார லாஜிக் என்று சொல்வதை தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை. வெங்கட்டும் அப்படி சொல்லகூடுமாவென அவர்தான் சொல்லவேண்டும்.

பொடிச்சி பதில் அளித்தது இந்த சந்தர்பத்தில்தான்- அதில் வெங்கட்டை மறைமுகமாய் குறிப்பிட்டிருக்க கூடும் எனினும்.

கடைசியாய் 'இது ரொம்ப தேவையான பதிவு' சூழலின் ஆரோக்கியம், என்றெல்லாம் மக்கள் ஜல்லியடிக்க தொடங்கியிருப்பது எதிர்பார்த்ததுதான். ஜாலியாய் எடுத்து கொள்வதோடு, சூழலில் வெளிப்படும் சொரணைத்தன்மைக்கான சான்றிதழாய் இதை கருதலாம்.

இது இந்த பதிவுடன் தொடர்புடைய ஒரு இடையீடு மட்டுமே. வெங்கட்டிற்கான என் எதிர்வினையோ, இதுவரை அவர் தெரிவித்துள்ள பல கருத்துகளுக்கான விமர்சனமோ அல்ல. அதை வேறு ஒரு நிதானமான சந்தர்பத்தில் எழுத உத்தேசம் உள்லது. நன்றி!

பெரிய மறுமொழியை வெட்டி போட்டதில் முக்கிய பகுதி விடுபட்டுவிட்டது, வேறு வழியில்லை, அதில் சொன்னதை பிறகு வேறு இடத்தில் சொல்கிறேன்

(பிறகு சொன்னது) இன்னும் ஒழுங்காய் படிக்க முடியவில்லை (விருப்பமும் இல்லை)யெனினும் கீழ்கண்டதை கவனித்தேன்.

//இதைப் படிக்கையில் எனக்கு வருத்தமாக இருந்தது. என்னுடைய கருத்தை அவர் மறுதலித்தால் அதே பதிவின் கீழ் (அல்லது அவரது சொந்தப் பதிவில்) மறுமொழி இடுவார் என்று நம்பியிருந்தேன். நான் முட்டாள்தனமாக எழுதியிருப்பதாகக் கருதினால் அதை நேரடியாக என்னிடம் சொல்லலாம். மாறாக அதை வேறிடத்தில் பயன்படுத்தியிருப்பது நான் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று. //

பொடிச்சியை நோக்கி இப்படி சொல்லும் வெங்கட், என்னை பற்றி பெயர் குறிப்பிடாமல், என் பதிவில் பின்னூட்டமிடுவதற்கு பதில், என் கருத்தை நேரடியாய் எதிர்கொள்ளாமல் மிகவும் நேர்மையற்றமுறையில் (அதாவது பொடிச்சிக்கு இவர் சொல்லும் நியாயத்தை தனக்கு பொருத்தி பார்காமல்) இப்படி சொல்லுகிறார்.

//அதேபோலவேதான் செருப்பாலடித்தலும், ஆண்குறி அறுக்க விடுக்கப்படும் அழைப்புகளும். அதையும் விடக் கொடுமையானது இதில் ஈடுபடாதவர்களை எல்லாம் If you are not with us, you are against us என்று புஷ்தனமாகப் பயமுறுத்துவது. //

புஷ்தனம் என்பதை மிகவும் எதிர்கும் நான், என்னிடம் அதௌ வெளிப்படவில்லை என்பதை வெங்கட்டுக்கு விளக்க(அதாவது மொழி புரியாமல் நடிப்பவருக்கு)விளக்க சாத்தியம் இல்லை. ஆனாலும் புஷ்தனம் பார்பனியத்தை விட மிகவும் நேர்மையானது என்று நினைக்கிறேன். வெங்கட்டிடம் வெளிப்படுவது என்னத்தனம் என்று சரியாய் பெயர் வைக்க இப்போது எதுவும் தோன்றவில்லை.

கவனிக்கவும்! வெங்கட்டின் இந்த நேர்மையின்மையை ஒரு தனி மனிதன் தர்கத்தில் காட்டக்கூடிய நேர்மையினமையாய் நினைக்கிறேனே ஒழிய பாப்பார புத்தியாய் நினைக்கவில்லை.

ஆற்றின் கீழே தண்ணீர் ஓடும்போது பல விஷயங்கள் சாத்தியம். அதில் ஒன்று திருநெல்வேலியில் நிகழ்ந்தது.

(மீண்டும் சொன்னது)
இன்னும் மறுமொழிகளை முழுவதும் படிக்க வில்லையெனினும் வெங்கட்டின் பதிவில் ஒன்று தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை கண்டிக்க 'செருப்படி, ஆண்குறியறுப்பு' என்று நான் உதார் விடுவது அவருக்கு ஒப்புதலில்லை. தாராளமாய் இருக்கட்டும். என் பதிவிலேயே அந்த உரிமையை மற்றவருக்கு அளித்தே எந்த விவாத்தையும் எதிர்கொள்கிறேன். அதே நேரம் கவனிக்க வேண்டியது 'பாப்பார' என்ற அடைமொழி கொண்டு வரும் வசைக்கு இத்த்னை தூரம் எழுதுபவர், தலித் சார்பாய் தன்னை சொல்லி கொள்பவர் ஒரு இடத்தில் கூட, திருமா மீதான (இந்த எல்லா விஷயமும் தொடங்கிய புள்ளியான) வசை குறித்து எந்த கண்டனமும் (என் பாணியில் அல்ல) தெரிவிக்க தேவையில்லாதவராகவும், அது குறித்து குறைந்த பட்சம் தன் கருத்தை கூட சொல்ல தோன்றாதவராகவும் இருப்பதை கவனிக்கிறேன். வேறு எத்தனையோ சொல்ல இருந்தாலும் அதை சொல்வதில் ஏதேனும் அர்த்தம் உண்டா?

3/18/2005 9:44 PM  
Blogger ROSAVASANTH said...

தொடர்புடைய இதர சுட்டிகள்.

காஞ்சியின் பதிவிற்கான சுட்டி மேலே உள்ளது. அங்கே பின்னூட்டங்கள் மறைக்கப்பட்டுளன.

ரஜினி ராம்கி பதிவின் பின்னூட்டங்கள்.

http://rajniramki.blogspot.com/2005/03/blog-post_14.html#comments

வெங்கட்டின் பதிவு. http://www.domesticatedonion.net/blog/?item=437

பொடிச்சியின் பதிவு
http://peddai.blogspot.com/2005/03/blog-post_17.html

பாலாஜியின் பதில்
http://balaji_ammu.blogspot.com/2005/03/blog-post_19.html

தாஸின் பதில்
http://lldasu.blogspot.com/2005/03/blog-post_20.html

அனாதையின் பதிவு
http://anathai.blogspot.com/2005/03/blog-post_20.html

ஏதாவது விடுபட்டிருந்தால் அறியத்தரவும்.

3/21/2005 3:18 PM  
Blogger Sri Rangan said...

ரோசா வசந்,
வணக்கம்!மனிதரை மனிதர் சாதி சொல்லி அடக்குதலும், ஒரு சாதி இன்னொரு சாதியைக் கேவலம் என்பதும் இந்த நூற்றாண்டோடு முடியுமா?குறியீடுகள்-குறிப்பான்கள் எல்லாம் மானுடரிட்ட உபயம்தாம்,இங்கு சாதியுங்கூட! என்னவொரு சிறுபிள்ளைத்தனமான வாசகர்கள்! மானுடம் வெட்கித் தலைகுனியவேண்டிய சாதிய அவலத்தைக் காப்தற்காக்கூட சில மனிதர்கள் வக்காலத்துவேண்டுகிறார்களே!நல்லாயில்லை.பெறுமதிமிக்க மானுட வாழ்வை இவ்வளவு கேவலமாக ஆளும்வர்க்கச் சாதிகள் தமது பொருளியல்-சமூகக்காரணிகளுக்காக கேவலமாகக் கருவருக்கிறார்களே!அதற்காகச் சில வாசகர்கள் கேவலமாக எழுதுவதும்-நீங்கள் மானுட மகத்துவத்திற்காகக் கலகங்கொள்ளுவதும் இந்த இருள்சூழ் இந்தியத் துணைக்கண்டத்தில் இன்னுமின்னும் தொடர்கதைதாம்.ஒழுங்கமைந்த பொருளியற் கலாச்சார வாழ்வற்ற குறைவிருத்தி நாடுகளில் இத்தகைய இழிநிலை இருப்பது வரலாறுதொட்டு நாம் காணுகிறோம்.ஆனால் இதன் அழிவுக்கான -உதிர்வுக்கான முன்னெடுப்பு வெறும்கருத்தியல் யுத்த்தால் மட்டுமே சாத்தியப்படப்போவதில்லை. இதற்கான பாரிய வேலைத்திட்டம் என்னவாக இருக்கமுடியும்? அது குறித்து விவாதிப்பது பயன்மிக்க செயலாகும். சமூகமாற்றம் என்பது வெறும் மனமாற்றாக இருக்க முடியாது. அது வேறு வகையானாது.சமூகவுணர்வற்ற சமுதாயமாகமாற்றப் படும் இந்திய மக்கள் வெறும் போலிக்கத்தலுக்கும்-பொல்லாத தனிநபர் வாததுக்கும்,இறுமாப்புக்கும் தம் மனிதாபிமானத்தை பலீயாக்கி விட்டார்கள்.இவர்களின்பால் வெட்கமுறுவதைத் திவிர வேறென்ன செய்யமுடியும்?ஒருவகையில் உங்கள் செயற்பாடு உங்கள் உயர்ந்த மானுட நேசிப்பை மட்டும் உறுதிப்படுத்தலாம்.அதற்குமேல்?
எந்தவொருமாற்றமும் முரண்பாடுகளாலேயே தீர்மானிக்கப் படும்.அந்த முரண்பாடுகளே மழுங்கடிக்கப்பட்டு கேவலமான தனிநபர்வாதச் சமூகமாக மாற்றப்படும் இந்திச் சமூக வாழ்வு இழிநிலைகளையே இனிதான கௌரவமாக்காணும் நிலை மாற்றமுற சரியான ஜனநாயகப் பண்பு முதலில் வேண்டும்.
அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

3/22/2005 5:28 AM  
Blogger ROSAVASANTH said...

ஸ்ரீரங்கன், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

பதிவுகள் திண்ணையில் நீங்கள் எழுதியவற்றை படித்திருக்கிறேன். உங்கள் பின்னூட்டத்திற்கான பதிலை சில நாட்களில் அளிக்கிறேன். நன்றி!

3/22/2005 8:03 AM  
Blogger SnackDragon said...

ரோசா ,
சந்திரமுகி பார்த்தேன். முதல் பத்து நிமிடங்களுக்கு ரசிகர்களோடு சேர்ந்து ரசிகனாய் சேட்டை செய்வதில்தான் எத்தனை ஆனந்தம்! என்ன செய்வது நானும் ரஜினி ரசிகன் தான்.

இனி, வலைப்பதிவில் புளித்த அதைப்பற்றி.

கலை என்று பார்த்தோம் எனில் சில சிறப்பான அம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ரஜினியின் நடிப்பில் கதையோடு சேர்ந்து எந்த இடத்திலும் ஓவர் "ஹைப்" செய்யாமல் மிகவும் கதையோடு ஒன்றியே செய்துள்ளார் என்பது கவனிக்கப்படவேண்டியது.

நியாயமாய், 'ஜோதிகாமுகிதான்' சந்திரமுகி. நீங்கள் ஏற்கனவே சொன்னது போல் , அது மிகை நடிப்புத்தான். ஆனால் இந்த இடத்தில், ஒரு பிளவாளுமையை(ரமணி சொன்னபிறகுதான் எனக்கும் தெரியும், தமிழ் திரயுலகத்துக்கு தெரிந்திருக்குமா என்று எனக்கு சந்தேகம்தான்)வெளிப்படுத்த நிச்சயம் மிகை கலந்த நடிப்பு தேவை அல்லது அப்போதுதான் அந்த மிகை அதன் தனிப்பண்பாய் தெரிய வாய்ப்புள்ளது. (ஆங்கிலத்தில் ரிச்சர்ட் கியர் நடித்த ஒரு படம், அதில் ஸ்பிளிட் பெர்சனாலிட்டியை ஒருவர் இது போல வெறி வந்த மாதிரிதான் செய்திருப்பார்) அதாவது பிளவவாளுமை என்பது சாதரண நிலையிலிருந்து , ஹைபர் நிலைக்கு போவது போன்ற உதாரணங்கள் மட்டும்தான் உள்ளது. அதற்கு எதிமாறான , மேலிருந்து கீழ் என்பது போல படம் நான் பார்த்ததில்லை. ரஜினியின் தர்ம யுத்த்ங்கள் -ல் அவருக்கு அமாவாசையானால், சங்கிலியால் கட்டவேண்டியிருக்கும்.

மிகை நடிப்பு குறித்து யோசித்ததில், இது தூரம் காரணமாகத்தான் முதலில் தோன்றியிருக்கவேண்டும் என்பது என் கருத்து. அந் அகாலத்தில், நாடகத்தில் நடிக்கும்போது, பின்னால் தூரத்தில் உட்கார்ந்து பார்ப்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும் விதத்தில் உரக்கப்பேசி
மிகுன்ட்ன முக பாவணைகளை வெளிப்படுத்தினால் கொஞமாவது ரீச் ஆகும். சரியான உதாரணம், சிவாஜியின் வீரப்பண்டிய கட்டபொம்மன். வீரம் என்றாலே கத்திப்பெசுதல் போன்ர வாசிப்பு சாத்தியப்படும். அதே போல் 'சிலர் சிரிப்பார், சிலர் அழுவார் ' பாடலின் க்ளோச்-அப்பில், முகத்தை பாவணைகாளாலே நிரப்பி இருப்பார். எனக்கு அது *அஙே* அனாவசியாமய் படுகிறது. இதே வரிசையில், மனோகரா,பராசக்தி, போல பல உதாரணங்களை சொல்லலாம். ஆனால் பழைய படங்களில் பொதுவான மக்களின் ரசிப்பே அப்படி இருந்னது என்று சொல்ல முடியும். இதுவும் நாடக்த்தில் இருந்து வந்த மரபாக பார்க்கமுடியும். என்றாலும், அந்த காலத்திலேயே நமது நடிகர்கள் ஹாலிவுட்ட்க்கு நமது நடிகர்கள் ரசிகர்களா இருந்து கொஞம் அதே போல் செய்யவும் ஆசைப்பட்டார்கள் என்பதும் தெரிந்ததே.அதுவும் ஓரளவு காண்ட்ரிப்யூட் செய்திருக்க வாய்ப்புள்ளது.

ஆனால் , இந்த கதைப்படி , 'சந்திரமுகி' ஏற்கன்வே கொலை வெறியில் இருப்பதால் மிகவும் பொருந்துகிறது என்றுதான் சொல்லவேண்டும். ஜோதிகா கலக்கி இருந்தார்.அகர முதல , நகர வில்ல என்ற பாடல் சகிக்க வில்லை. அது டுபாக்கூர் பாடல். ஏனெனில் , ஒரு நல்ல டப்பாங்குத்து வரிசையில் அது இல்லை.

4/25/2005 8:46 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter