ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Monday, March 21, 2005

அறைகூவல்!

பிரமீள்

இதுபுவியை நிலாவாக்கும்
கண்காணாச் சரக்கூடம்.

நடுவே
நெருப்புப் பந்திழுத்து
உள்வானில் குளம்பொலிக்கப்
பாய்ந்துவரும் என் குதிரை.

பாதை மறைத்து நிற்கும்
மரப்பாச்சிப் போர்வீரா!
சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.

தோலும் தசையும்
ஓடத் தெரியாத
உதிரமும் மரமாய்
நடுமனமும் மரமாகி
விரைவில்
தணலாகிக் கரியாகும்
விறகுப் போர்வீரா!

தற்காக்கும் உன் வட்டக்
கேடயம்போல் அல்ல இது.

சொற்கள் நிலவு வட்டம்
ஊடே
சூரியனாய் நிலைத்(து) எரியும்
சோதி ஒன்று வருகிறது.

சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.

தீப்பிடிக்கும் கேடயத்தில்
உன்கையில் கவசத்தில்
வீசத் தெரியாமல்

நீ ஏந்திநிற்கும் குறுவாளில்
யாரோ வரைந்துவிட்ட
உன் மீசையிலும்!

நில் விலகி,
இன்றேல் நீறாகு!

(நன்றி: என் விருப்பதை கேட்டு வெளீயிட்ட நண்பர் சுந்தரமூர்த்திக்கு)

Post a Comment

1 Comments:

Blogger ROSAVASANTH said...

'கன்னாடு பூக்கள்' படம் பார்த்தேன். பிடித்திருந்தது. இது போன்ற படங்கள் வருவது ஆரோக்கியமானது. பார்திபன் தொடர்ந்து இது போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்று நினைக்கிறேன். மூலம் மலையாளத்தில் உள்ளது என்று கதையை பார்த்ததும் தோன்றுகிறது. விவரம் தெரியவில்லை.

3/23/2005 9:11 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter