ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Monday, March 21, 2005

மீண்டும்!

விரிவாக எழுத நினைத்தேன். முடியாது. என் பதிவில் நேற்று ரவி ஸ்ரீனிவாஸ் எழுதாத பின்னூட்டம் அவர் பெயரில் வெளியாகியது. எனக்கு இது போன்ற அற்ப விஷயங்களில் செலவழிக்க நேரமில்லை. எழுத எத்தைனையோ இருக்கிறது. படிக்கவும் நண்பர்கள் இருக்கிறார்கள். இப்போதிருக்கும் நேர நெருக்கடியில் அதையெல்லாம் எழுதாமல் ஒத்தி போட்டு கொண்டிருக்கிறேன். இந்த நிலமையில் உயிரினங்களிலேயே கேவலமான ஒன்று செய்யும் கேடுகெட்ட செயல்கள் தொடர்பாக நேரம் செலவழிப்பது சாத்தியம் இல்லை.

என் பதிவில் யார் வேண்டுமானாலும் எதிர்கருத்து சொல்லலாம். என்னை வசை பாடுவது குறித்து எனக்கு என்றைக்கும் பிரச்சனை கிடையாது. மற்றவரை பற்றி வசைகள் வரும்போது மட்டும் கவனமாய் இருப்பது என்று நினைத்திருக்கிறேன். கவனமாய் இருப்பது என்பதற்கு என்ன பொருள் என்று எனக்கே தெரியாது. அது குறித்து எதுவும் யோசித்ததும் இல்லை. இது வரை நடவடிக்கை எதுவும், இது தொடர்பாய், எடுத்ததும் கிடையாது. அதிலும் எழுதிகொண்டிருக்கும் 400 அடையாளம் தெரிந்த வலைப்பதிவாளர்களோ, வேறு யாருமோ ஒரு இணைய அடையாளத்துடன் வந்து எழுதும்போது பிரச்சனையில்லை. பெயர் கூட சொல்லாத சில புழுக்கள் வந்து விருப்பப்படி (மற்றவரை) வசைபாடிவிட்டு செல்ல நான் வசதி செய்து தர முடியாது. மற்றபடி இங்கே எந்தவித கருத்து சொல்லவும், வசைபாடவும், எந்த நாயும் வந்து மோண்டுவிட்டு போகவும் கூட தடை எதுவும் இல்லை.

இந்நிலையில் என் பெயரில் நான் எழுதாத பின்னூட்டம் வெளியானது. என் பதிவில் ரவி எழுதாத பின்னூட்டம் அவர் பெயரில் வெளியாகிறது. இது அனாவசிய தொந்தரவுகளை நேரவிரயங்களை ஏற்படுத்துவதுடன், என் Bளாகர் கணக்கின் பாஸ்வேர்ட் அறிந்த நண்பர்களுக்கு தேவையற்ற தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதை தொடரப்போவதாகவும், அதுவும் பெருமையாக, உயிரினங்களிலேயெ இழிந்த ஒன்று அறிவிக்கவும் செய்திருக்கிறது. யார் எதை எழுதியது என்ற குழப்பத்தை தெளிவாக்குவதிலும், தொடர்ந்த கண்காணிப்பில் இருப்பதும் எனக்கு சாத்தியமில்லை. நான் வலைப்பதிவுகளில் எழுதப்படுவதில் 20%ஐ கூட முழுவதும் படிப்பதில்லை. அதனால் இதை கண்காணிக்க முடியாது. இந்த தொந்தரவினால் எங்கே மறுமொழி அளித்தாலும் அதை என் பதிவிலும் இடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன். (இப்படி ஒரு கட்டாயத்தை உண்டாக்கியதற்கும் உயிரினங்களில் இழிந்த ஒன்று பெருமையடித்து கொள்கிறது.) அங்கேயும் பிரச்சனை செய்வதாய், அவர்களும் இருமுறை பின்னூட்டமிடுவதாய், அது சபதம் செய்துள்ளதால் அனாமதேய பின்னுட்டமளிக்கும் வசதியை நீக்கவேண்டியதாகிவிட்டது. நேற்று இதில் நேரம் செலவழிக்க விரும்பாமல் அனாமதேயமாக வந்த பின்னூட்டங்களை(மட்டும்) நீக்கினேன். அதை மீண்டும் இட்டுள்ளேன். Bளகர் கணக்கு இல்லாதவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்தால் அதை இங்கே வெளியிட முடியும்.

இதில் ஏதோ ஜனநாயகம் பாதிக்கப்பட்டதாய் யாரும் முட்டாள்தனமாய் ஒளறினால் சொல்ல எதுவும் இல்லை. என் Bளாகர் தளம் பத்திரிகையல்ல. இணயம் தரும் வசதிகளை பயன்படுத்தி என் கருத்துக்களை எழுத என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இடம் இது. இதில் மற்ற கருத்துகளுக்கு நான் அளிக்கும் மதிப்பும் தேவையும் காரணமாக உள்ள ஒரு வசதிதான் பின்னூட்டம். அதில் சின்ன மற்றத்தை செய்திருக்கிறேன், அவ்வளவே! இன்று யாருக்கும் யாரும் கருத்து சொல்லும் சுதந்திரத்தை மறுக்க சாத்தியம் இல்லை. உடனே ஒரு Bளாகர் கணக்கு தொடங்கி அதை செய்ய முடியும். அதனால் இந்த தொந்தரவின் காரணமாய் அனாமதேய பின்னூட்ட வசதியை நீக்கியதை ஜனநாயக மறுப்பாய் யாரும் சொன்னால் அது குறித்து சொல்ல எதுவும் இல்லை.

நான் எழுதாத பின்னுட்டத்தை என் பெயரில் எழுதிய, இன்னும் எழுதப்போவதாய் சொல்லும் உயிரினங்களில் கீழான ஒன்று பதிவு தொடங்க போவதாக சொல்லியிருக்கிறது. நல்ல விஷயம்! அது செய்த கீழ்தரமான காரியத்தை மனதில் வைக்காமல் தமிழ்மணம் அந்த பதிவிற்கும் இடம் அளிக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். மாறுவதற்கும், கருத்து ரீதியாய் செயலாற்றவும் எத்தகையவருக்கும் உரிமை இருக்க வேண்டும் என்று நினைப்பதால் இதை உளப்பூர்வமாகவே சொல்கிறேன் -யார் எப்படி எடுத்துகொண்டாலும்!

Post a Comment

6 Comments:

Blogger Thangamani said...

ரோசாவசந்த், இந்தத் தொந்தரவினால் தான் நான் பிளாக்கரில் பதிவு செய்தவர்கள் மட்டும் பின்னூட்டமிட முடிந்தது மாதிரி என்னுடைய வலைப்பதிவை மாற்றினேன். அப்போது நான் ஏதோ சனநாயகச் சாளரத்தை அடைத்துவிட்ட மாதிரி, சில அனாமதேயங்கள் அலறின. இது எவ்வளவு நகைச்சுவைக்குறியது என்பதைக்கூட அறியாதவைகள் அவை. பொதுவாக சற்று பிரச்சனை தோன்றுவதாக உள்ள சில பின்னூட்டங்களுக்கு எதிர்வினை செய்யும் முன்போ, அல்லது அதைக்குறித்தோ, அந்த நபரிடமே கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுதல் யாவருக்கும் நலம். நண்பர்களுக்குள்ளும் அது நல்லது.

3/21/2005 3:01 PM  
Blogger வானம்பாடி said...

சரியான முடிவு வசந்த். நானொன்றும் பெரிதாக எழுதிக் கிழித்துவிடவில்லையென்றாலும், எனக்கு இந்த அனாமதேயக் கருத்துக்களைப் பற்றிய இப்படியான ஒரு பயம் இருந்தது; தன் அடையாளம் தெரியாது எனும்போது ஒரு சிலருக்கு கேவலமான பின்னூட்டங்களை இடும் துணிவு வரும். அதனாலேயே நான் ப்ளாக்கரில் பதிவு துவக்கும்போதே இவ்வசதியை எடுத்துவிட்டேன்.

3/21/2005 5:36 PM  
Blogger ஜெ. ராம்கி said...

இதெல்லாம் காலத்தின் கட்டாயம்தான்! தடுப்பதற்கு சில வழிகளை தேட ஆரம்பிக்கலாம். முதலாவது எல்லோருமே அவரவர் பிளாக்கர் கணக்கை பயன்படுத்தி பின்னூட்டமிடுவது. கூடவே தங்களுடைய புரோபைலை எல்லோரும் பார்க்கும்படி போட்டோவுடன் வைத்திருப்பது. முயற்சி செய்து பாருங்கள்.. இதிலும் ஏதாவது ஓட்டை இருக்கலாம்!

3/21/2005 5:56 PM  
Blogger Vijayakumar said...

சில நண்பர்கள் IP நம்பரை வைத்து அனானிமஸ்களை எதேதோ செய்து கண்பிடிக்கிறார்கள். அவர்கள் விரிவாக விளக்கி ஒரு பதிவிட்டால் நன்றாக இருக்கும். ஆனால் அது நேரத்தை சாப்பிடும்.

அதை விட நல்ல முறை ப்ளாக்கர்களை மட்டும் உள்ளே பின்னூட்டமிட விடுவது. ப்ளாக்கர் கணக்கை ஆரம்பிப்பது எளிது என்றாலும் சோம்பேறிப்படுபவர்களும் உண்டு.

3/21/2005 6:12 PM  
Blogger ROSAVASANTH said...

கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி. அனாமதேய பின்னுட்ட வசதியை நீக்கும் உத்தேசம் இல்லையெனினும் வேறு வழையின்றி செய்ய நேரிட்டது.

காஞ்சி ஃபில்ம்ஸில் நான் இட்டது "மேலவளவு கொலை தொடர்பான இந்த தீர்ப்பு நல்ல தொடக்கமாகவே தெரிகிறது. பதிந்ததற்கு நன்றி!" இது தவிர நாராயணணின் பதிவிலும் சுமுக்கும் பதிலாய் எழுதியுள்ளேன்.

3/21/2005 10:08 PM  
Blogger ROSAVASANTH said...

காசி பதிவில் எழுதியது...

"இப்போதுதான் பார்தேன். அந்தரங்கம் வலைப்பதிவையும் பார்தேன் (முழுவதும் படிக்கவில்லை.) எனக்கு இதை அனுமதிப்பதில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அது ஒரு ஏ Bளாக் என்ற அறிவிப்புடன், அதில் எழுதப்பட்டிருக்கக் கூடிய விஷயங்கள் குறித்த எச்சரிக்கையுடன்!(நான் எழுதியதுதான், என் வலைப்பதிவிலும் ஒரு காப்பி இருக்கும்.) "

3/22/2005 6:55 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter