ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, September 07, 2005

கொடுமையிலும் கொடுமை!

(பொதுவாய் இங்கே எதையும் மறுபதிப்பு செய்வதில்லை. திண்ணையில் பழைய சிறுகதைகளை மேய்ந்துகொண்டிருந்த போது, ஜி. நாகராஜனின் நிமிஷக் கதைகள் (மீண்டும்) கண்ணில் பட்டது. தற்சமயத்தின் பொருத்தம் கருதியும், பகிர்ந்துகொள்ளவும் இங்கே பதிகிறேன். திண்ணைக்கு நன்றி. மேலே தலைப்பு நான் தந்தது.)


அவள் ஒரு விபச்சாரி. அவளை வைத்துக் கதை எழுத வேண்டுமென்று எழுத்தாளன் விரும்பினான். ஆகவே அவன் அவளிடம் சென்றான்.

"பெண்ணே! நீ இவ்வளவு கெட்ட நிலைக்கு வரக்காரணம் என்ன?" என்று எழுத்தாளன் கேட்டான்.

"என்ன? ... கெட்ட நிலையா? அப்படி ஒண்ணும் எனக்கு சீக்குக் கீக்குக் கிடையாது. ஒங்கிட்ட சீக்கில்லாமே இருந்தா அதுவே ஆண்டவன் புண்ணியம்" என்றாள் விபச்சாரி.

"இல்லே, உனக்கு சமுதாயம் எவ்வளவு பெரிய கொடுமையை இழைத்துவிட்டது!" என்றான் எழுத்தாளன்.

"கொடுமை என்ன கொடுமை! பசிக்கொடுமை எல்லோருக்குந்தானிருக்கு... இந்த போலீசுக்காரங்க தொந்தரவு இல்லாட்டி ஒண்ணுமில்லே" என்றாள் விபச்சாரி.

"கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகிறது உனக்கு கஷ்டமாக இல்லை?"

"யாரும் கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகல. எனக்குன்னு ஒரு புருஷன் இருக்காரு"

"மற்ற பெண்கள் எல்லாம் கட்டின புருஷனோடு மட்டும்தான் இருக்கிறார்கள். வேறு ஆண்பிள்ளைகளோடு சம்பந்தம் வைத்துக்கொள்வதில்லை தெரியுமா?"

"அப்படியா?"

"பின்பு?"

"சரி, உங்களுக்கு பெஞ்சாதி இருக்குங்களா?"

"ஊம், இருக்கு"

"நீங்க மட்டும் எங்கிட்ட வந்திருக்கீங்களே ஒங்களுக்கு வெக்கமா இல்லே? .. சரி, அது கிடக்கட்டும்; நேரமாவுதுங்க"

கொடுமையிலும் கொடுமை, கொடுமையை கொடுமை என்று புரிந்து கொள்ளாததுதான். எழுத்தாளனுக்கு அது புரியவில்லையோ என்னவோ, விபச்சாரியைக் காட்டி, வாசகர்களின் கண்ணீரைப் பிதுக்கியெடுத்து, நாலு காசு சம்பாதிக்கும் எண்ணத்தை மட்டும் கைவிட்டான்.

Post a Comment

12 Comments:

Blogger Thangamani said...

வசந்த், நாகராஜன் கதைகளுக்கான இந்த சுட்டிக்கு நன்றி!ஒவ்வொரு கதையும் அவர் எப்படி எழுதியிருக்கிறார்! அந்த 4வது கதை படித்தீர்களா?

நன்றி!

9/07/2005 3:17 PM  
Blogger ஜோ/Joe said...

நல்ல கருத்து. சுட்டிக்கு நன்றி!

9/07/2005 3:27 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

ரோசா சுட்டிக்கு நன்றி.இம்முறை நாளை மற்றொரு நாளே,குறத்தி முடுக்கு இரண்டையும் வாங்கியிருந்தேன்.நாகராஜனின் சிறுகதைத் தொகுப்பை வாங்கவில்லையே என்று இப்போது கவலைப்படுகிறேன்.

9/07/2005 3:28 PM  
Blogger வானம்பாடி said...

மிக நல்ல கதை.
சுட்டிக்கு நன்றி வசந்த்!

9/07/2005 4:23 PM  
Blogger ROSAVASANTH said...

தங்கமணி நன்றி. எல்லா கதையையும் ஏற்கனவே படித்திருக்கிறேன்.ஆனால் 4வது கதை ஒரு கவர்ச்சியான கருத்தாக மட்டுமே எனக்கு படுகிறது. மாறாக மற்ற கதைகள் முரண்களை முரண்நகையுடன் பேசுகிறது என்று நினைக்கிறேன்.

ஈழநாதன், ஜோ, சுதர்சன் நன்றி.

சாருநிவேதிதாவின் ஜீரோ டிகிரியில் பாலியல் தொழிலாளியை வைத்து வரும் சம்பவங்களும் குறிப்பிடத்தக்கவை. என்னிடம் புத்தகம் இப்போது இல்லை, நாராயணன்..?
(முனியாண்டி 'பிச்ச மூர்த்தியை படித்திருக்கிறாயா?" என்று கேட்க அவள் உஷாராகி 'நீ சிறுப்பதிரிகை ஆசாமியா?' என்றாள் etc... etc..)

9/07/2005 4:38 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

ரோசா அந்தப் பகுதியை வேண்டுமா சொன்னால் இன்றிரவு தருகிறேன்.முனியாண்டி எதற்காக படைப்புகளை பல படிகள் எடுத்து வைக்கிறான் என்பதற்கான காரணத்தை சொல்லும் பகுதி

9/07/2005 4:48 PM  
Blogger ROSAVASANTH said...

ஈழநாதன், அந்த பகுதிதான். ஆனால் அதை -கதையின் மற்ற பகுதியிலிருந்து பிரித்து -தனித்து வாசித்தால் அது எப்படியிருக்கும் என்று சந்தேகமாக இருக்கிறது.

9/07/2005 5:24 PM  
Blogger Narain Rajagopalan said...

எந்த பகுதி வேண்டுமென்று சொன்னால் எடுத்துத் தருகிறேன் வசந்த். ஒரு சிறுபத்திரிக்கையாளன் பாலியல் தொழிலாளியிடம் போகிறான் என்று ஆரம்பித்து இருவரது முரண்களையும் சொல்லும் பகுதியது.

9/07/2005 6:58 PM  
Blogger ROSAVASANTH said...

நாரயணன், மேலே நானும், ஈழநாதனும் குறிப்பிடும் பகுதிதான். ரொம்ப முக்கியமில்லை. பல மதிப்பீடுகளை நக்கல் செய்யும் விதமாய் எழுதப்பட்டிருக்கும் என்பது மட்டுமே குறிப்பிட விரும்பியது.

9/08/2005 3:44 PM  
Blogger Kannan said...

இந்தக் கதைக்கும் சுட்டிக்கும் நன்றி.

9/08/2005 7:07 PM  
Blogger ஜெ. ராம்கி said...

We can forward the same to Prabanjan also!

9/29/2005 6:02 PM  
Blogger ROSAVASANTH said...

Ramki, I don't understand what you mean. Can you expalin what Prabanjan has to do with this post? Anyway I am just not able to come to net. I will see your reply next week. Thanks!

9/29/2005 6:14 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter