ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Monday, October 10, 2005

குஷ்பூ எழுதியது.

(இங்கே வலைப்பதிவில் திரிக்கப் பட்டது போல் குஷ்புவின் பேட்டி எதுவும் வெளிவரவில்லை. நான் அறிந்த வரையில் இந்தியா வெளியிட்ட பலருடய கருத்துக்களை திரட்டி வெளியான சர்வே கட்டுரைக்காக, தன்னிடம் கேட்டுகொள்ளப்பட்ட படி ஒரு சிறு கட்டுரையை அவர் எழுதியிருந்தார். அதை ஒரு துண்டு பிரச்சுரத்திலிருந்து கீழே தருகிறேன்- Rosavasanth.)

படித்த எந்த ஆணும் திருமனத்தின் போது மனைவியின் கன்னித்தன்மையை எதிர்பார்க்க மாட்டான்.

குஷ்பு


பெண்கள் தங்களுடைய செக்ஸ் விருப்பங்களை வெளியிடும் விஷயத்தில் சென்னை பெங்களுரை விட பின் தங்கியே இருக்கிறது. இப்போது கடந்து வருகிறார்கள். பப்களிலும் டிஸ்கொதேகளிலும் ஏராலமான பெண்களை பார்க்க முடிகிறது.செக்ஸ் பற்றி பெண்களால் வெளிப்படையாக பேசமுடிகிறது. கட்டு பெட்டித்தனம் நிறைந்த இந்திய சமூகத்தில் பெண் மெல்ல இந்த விஷயத்தில் சிறகடிக்க ஆரம்பிக்கிறாள். ஆனாலும் ஸ்டெஃபானி போன்ற பெண்களுக்கு ஏற்பட்ட விபத்துக்கள் இந்த போக்கு ஆரோக்கியம்தானா என்கிற கேள்வியை எழுபுகிறது. அதே சமயம் பள்ளி கூடங்களில் செக்ஸ் கல்வி மிகவும் அவசியம். பள்ளி கூடங்களில் சொல்லி தரவில்லை என்றாலும் கூட பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய அடிப்படைகளை சொல்லித் தர வேண்டியிருக்கிறது.

என்னை பொறுத்தவரை செக்ஸ் என்பது உடல் பற்றியது மட்டுமல்ல. அதில் மனதும் சம்பந்தப் பட்டிருக்கிறது. வாரந்தோறும் பாய்ஃப்ரண்டை மாற்றிகொள்வது போன்ற விஷயத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு பெண் தனது பாய் ஃப்ரண்ட் பற்றி உறுதியாக இருக்கும் போது அவள் தனது பெற்றோரிடம் சொல்லிகொ0ண்டே அவனுடன் வெளியே போகலாம். தன் பெண் சீரியஸான உறவை வைத்திருக்கும் போது அதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.

பெண்கள் திருமணம் ஆகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களில் இருந்து நமது சமுகம் விடுதலை ஆகவேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்ய போகிறவள் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துகொள்ளும் போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னை தற்காத்து கொள்ள வேண்டும்.

நான் காதலித்த நபரை திருமணம் செய்துகொண்டேன். நாங்கள் எங்களது உறவு பற்றி நிச்சயமாக இருந்ததால் திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம். இப்போது திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் பிறந்ததால் எங்கள் பொறுப்புகள் அதிகமாகியிருக்கின்றன. குழந்தைகளும் எங்களுடனேயே தூங்குவதால் நாங்கள் எங்களுக்கென்று தனியான நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இப்பொழுதும் எங்கள் தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கிரது.மனவாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உடல்ரீதியாகவும் சந்தோஷமளிக்க தெரிந்திருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் முழுமையாக திருப்தியடைய செய்வதுதான் ஆனந்தம். இருவரும் தங்கள் செக்ஸ் ஆசைகளை பரஸ்பரம் புரிந்துகொண்டால் மணவாழ்வில் பிரச்சனை இருக்காது.

சில தம்பதிகள் செக்ஸ் புத்த்கங்கள் படங்கள் பயன்படுத்தி தாம்பத்திய இன்பத்தை பெருக்கி கொள்கிறார்கள். அதை தவறு என்று சொல்ல முடியாது. அதே சமயம் இருவருமே ஒருவர் மற்ரவரது விருப்பு வெறுப்புகளையும் சௌகரிய அசௌகரிய்ங்களையும் உணர்ந்து செயல்பட வேண்டும். பெண்கள் தமது செக்ஸ் விருப்பங்களை பற்றி பேசினால் அவர்களை தவறானவர்களாகப் பார்க்கும் ஆண்களின் கண்ணோட்டம் மாற வேண்டும். செக்ஸிற்கு இரு நபர்களிடைய மன இணக்கம் அவசியம்.

(அவசரமாய் ஒரு சைபர் கபேயில், இதன் அவசியம் கருதி, இகலப்பையின்றி சுரதா உதவியுடன் அடித்து ஒட்டுவதில் வரும் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகளுக்கு மன்னிக்கவும்-Rosavasanth)

Post a Comment

5 Comments:

Blogger மு. சுந்தரமூர்த்தி said...

முதல் முறையாக குஷ்பு சொன்னதை முழுமையாக வாசிக்கத் தந்ததற்கு நன்றி. உப்புக்கு பெறாத விஷயத்தை ஊதிப் பெருக்கியதற்காக பாமகவும், தலித் சிறுத்தைகளும் மன்னிப்பு கேட்பது நல்லது.

"ஊரைவிட்டு விரட்டவேண்டும்" என்ற கூச்சல் எழும்போதெல்லாம் எனக்கும் கொஞ்சம் கிலியாக இருக்கும். சகமனிதரின் மீது உடல்ரீதியான வன்முறையும், பொதுவில் வைத்து அவமானப்படுத்தும் உளரீதியான வன்முறையும் ஒன்றே.

10/11/2005 12:16 AM  
Blogger ramachandranusha(உஷா) said...

ரோ. வ, நன்றி. ஆனாலுல் அநியாயம்! இதுல தமிளர் பண்பாடு, கற்பு நெறி, புண்ணாக்குகள் எங்க வந்தது? துடைப்ப கட்டய தூக்கும் தமிழ் குடிதாங்கி அம்மணிகள் இத படிச்சிருப்பாங்களா? நா கூட ஒரிஜனல் படிக்காம குஷ்பூவ தப்பா நெனச்சதுக்கு வருத்தப்படுகிறேன்.

10/11/2005 1:54 PM  
Blogger ஜெ. ராம்கி said...

//"ஊரைவிட்டு விரட்டவேண்டும்" என்ற கூச்சல் எழும்போதெல்லாம் எனக்கும் கொஞ்சம் கிலியாக இருக்கும். சகமனிதரின் மீது உடல்ரீதியான வன்முறையும், பொதுவில் வைத்து அவமானப்படுத்தும் உளரீதியான வன்முறையும் ஒன்றே.

I second Sundaramoorthy.

10/11/2005 7:29 PM  
Blogger வாசகன் said...

குஷ்பு என்ன சொன்னார்..

"அந்த இதழில் வந்திருந்த அந்தச் செய்தியின் அடிப்படையில் ஒரு நாளிதழ் குஷ்புவிடம் ""இப்படி சொல்லியிருக்கிறீர்களே?'' என்று கேட்டது. அதற்கு குஷ்பு ""என்னுடைய கருத்து படித்தவர்களுக்குப் புரியும். தமிழ்நாட்டில் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளாதவர்கள் இருக்கிறார்களா?'' என்று கூற அதன் பிறகுதான் பிரச்சினையே பூதாகரமானது."
- DINAMANI 27/09/2005

10/11/2005 9:20 PM  
Blogger G.Ragavan said...

மொத்தத்தில் ஈரைப் பேனாக்கி....பேனைப் பெருமாளாக்கி...கடைசில் நாட்டை விட்டு பெருமாளைத் துரத்த வேண்டும் என்று கத்துவதுதான் நடந்திருக்கிறது. பெரிய அரசியல் பொறுப்பிலுள்ளவர்கள் கொஞ்சம் நாவடக்கத்தோடு பேச வேண்டும். குஷ்பூ சொன்னதை விட கட்சித் தலைவர்கள் சொல்லுக்கு அதிக வினை உண்டு. ஆகையால்தான் என்றைக்கும் "யாகாவாராயின் நாகாக்க".

நாட்டை விட்டுத் துரத்துவேன் என்று சொன்னதை நானும் படித்தேன். நிச்சயமாக ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைவரின் பேச்சாக அதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஏதோ கட்டைப் பஞ்சாயத்து நடத்துகிறவன் பேச்சு போல இருந்தது.

10/12/2005 5:45 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter