ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, October 13, 2005

மேகின்டோஷில் தமிழ்.

மீண்டும் ஒரு உதவி விண்ணப்பம்.

மேகின்டோஷில், யூனிக்ஸில் யூனிகோட் தமிழ் எழுத்துக்கள் ஒன்று தெரிவதில்லை, அல்லது குண்டக்க மண்டக்க தெரிகிறது என்று நினைக்கிறேன். இதை சரி செய்ய முடியும், எ-கலப்பையையும் பயன்படுத்த் முடியும் என்று இகாரஸ் பிரகாஷ் எனக்கு தகவல் சொன்னார். சில கணித மேதைகளை போல, தீர்வு உண்டு, ஆனால் எப்படி தீர்ப்பது என்று தெரியாது என்பதாக அவரளித்த தகவல்கள் இருந்தன. அதனால் இந்த விண்ணப்பம்.

விண்டோஸ் தவிர்த்த மற்ற OSகளில் தமிழ் படிப்பது/எழுதுவது குறித்து தமிழிணையத்தில் எங்காவது விவாதித்து தீர்வு சொல்லப்பட்டிருகிறதா? நண்பர்கள் அது குறித்த தங்கள் அறிவையும், தகவலையும், கருத்துக்களையும் நேரம் இருக்கும் அளவிற்கு பகிர்ந்துகொள்ள முடியுமா? பதிலளிக்க போகும் அனைவருக்கும் நன்றி. என் பிரச்ச்னையை தீர்க்கும் நண்பருக்கு இந்த பதிவை சமர்பிக்கிறேன். (மேலதிக சமர்ப்பணங்கள் பிர்ச்சனை தீர்ந்த பின்.) மிகவும் நன்றி.

Post a Comment

7 Comments:

Blogger PKS said...

I remember reading a mail on this subject sometime back. Could not locate it. Probably it came from the yahoo group named TSCII. Srikanth Meenakshi is one person who could help you on it. I vaguely remember that he taking part in that discussion. Hope it helps.

Thanks and regards, PK Sivakumar

10/13/2005 10:06 PM  
Blogger Srikanth Meenakshi said...

வசந்த், அடியேன் ஆப்பிள் தாசன். ஒவ்வொரு பதிவையும் எனது மஹோன்னதமான பவர் புக்கில் தான் எழுதுகிறேன்.

உங்கள் கேள்விக்கு விடை எளிது: புலி. ஆப்பிளின் டைகர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், தமிழ் உள்ளிடுவதற்கு வெளியிலிருந்து எதுவும் தேவையில்லை. Mega thanks to Murasu Nedumaran for this. Just go to system preferences, International, and enable Murasu as a keyboard layout and set the language switching short-cut to either apple-space or cntrl-space and you can switch between english and tamil just a flick of your thumb.

If you don't have Tiger, you can still type Tamil, but you will have to get the software from xenotypetech at http://www.xenotypetech.com/osxTamil.html

எனக்குத் தெரிந்து இ-கலப்பை மேக்கில் உதவாது. முயன்றிருக்கிறேன், பல மணி நேரங்களுக்கு.

மேலும் கேள்வி இருப்பின், என்னை அஞ்சலில் தொடர்பு கொள்ளவும் - srikanthmeenakshi, yahoo.com.

10/13/2005 10:20 PM  
Blogger ROSAVASANTH said...

PKS and Srikanth, Thanks for the comments and suggestions. I will try myself first. If the problem continues I will contact. Thanks again!

10/14/2005 4:36 PM  
Blogger ROSAVASANTH said...

I am surprised to see a +vote for this post also.

10/14/2005 8:02 PM  
Blogger ROSAVASANTH said...

சுந்தர ராமசாமியின் மறைவு குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். தீவிர எழுத்துக்களை வாசிப்பதற்கான எல்லா உத்வேகத்தையும் எனக்கு அளித்த ஆசானாக அவரையே கருதுகிறேன். பல முரண்பாடுகள் விமர்சனங்கள் இருந்த போதும், அவர் மீதான பலரின் தாக்குதல்கள் நியாயமற்றதாகவும் அதிகப்படியானதாகவுமே எனக்கு தோன்றிவந்தது. அதனாலேயே 'பிள்ளை கெடுத்தாள் விளை' குறித்த என் விமர்சனங்களை முன்வைக்கவில்லை. கிட்ட தட்ட பத்து வருடங்கள் முன்பு பிரமீள் இறந்த அன்று கௌதம சித்தார்தனுடன் கழித்த இரவு நினைவுக்கு வருகிறது. பிரமீளின் கவிதைகளை இரவு முழுவதும் வாய்விட்டு படித்து அஞ்சலி செலுத்தினோம். இப்போது நண்பர்களும் புத்தகங்களும் தொடர்பிலில்லாத பொழுதில் எல்லாம் அபத்தமாய் படுகிறது. நேற்று இரவு இளயராஜாவின் இசை நிகழ்சிக்கு சென்று வந்த அனுபவத்தை பதிவு செய்யலாம் என்று வந்தேன். இப்போது ஆஃபிஸ் வேலை கூட எதுவும் நடக்கும் என்று தோன்றவில்லை. ஜேஜே சில குறிப்புகளில் ஜேஜே மற்றும் காமுவின் மரணம் சார்ந்த விவரணைகள் நினைவுக்கு வருகிறது. எல்லாம் மிக அபத்தமாய் படுகிறது.


மூன்ற்ய் வாரங்களுக்கு கணணி பக்கம் வருவதே அரிதாகிவிடும் என்பதால், இப்போதைக்கு எது குறித்தும் எழுத இயலாது. அதற்கு பின் சில விஷயங்கள் குறித்து பேசும் எண்ணம் உள்ளது. கருத்து தெரிவித்தவ்ர்களுக்கு நன்றி.

10/17/2005 5:42 PM  
Blogger ROSAVASANTH said...

அடேங்கப்பா! தமிழ் சினிமாவின் எந்த கோர்ட் சீனும் கிட்ட வரமுடியாது போல தெரிகிறது. 'நான் நிரபராதி', 'நான் அவன் அல்ல' என்பது போல் எத்தனை வசனங்கள்! இதற்கு பதில் நான் கேட்ட கேள்விகளுக்கு ஓரிரு வரிகளில் ஏதேனும் உருப்படியாய் மொட்டையாய் எழுதியிருந்தால் கூட எத்தனை அறிவுபூர்வமாய் இருந்திருக்கும்!

என்றாலும் என்னை 'அற்பன்' என்று சொன்னதற்கு மிகவும் நன்றி. உங்கள் கருத்துக்களை திரித்து உங்களை ஆணாதிக்கவாதி என்று தொடங்கி ஏகப்பட்ட வார்த்தைகளால் அர்சித்திருக்க என்னால் முடியும் என்றாலும், சந்தேகத்தின் பலனை அளித்து 'நட்டு மட்டும் கழண்டு விட்டதாக' சொன்னதை வசை என்று சொன்னவர்களுக்கு, நான் முன்வைத்த விமர்சனத்திகாக அற்பன் என்று சொல்வது எப்படி தெரியும் என்று என்னால் ஊகிக்க முடியாவிட்டாலும், என் பக்கம் கொஞ்சம் நியாயம் சேர்ப்பதற்கு நன்றி.

ஆனாலும் தப்பா நினைச்சுக்காதீங்க ரவி, நீங்க ரொம்ப வளர வேண்டியிருக்கிறது. ஒருவர் சொன்னதை மறுக்க, உமது 'சாதனைகளை பட்டியல்' இடுவதோ, அன்று அதை செய்தேன், இதுவரை இப்படி கிழித்தேன் என்று சொல்வது அல்ல மறுப்பு. சும்மா காக்காய் எச்சம் விடுவது போல் வாக்கியங்களை சகட்டு மேனிக்கு தொடர்பில்லாமல் அடுக்குவது அல்ல. பதில் நேரடியாக விஷயம் குறித்து இருக்க வேண்டும். உதாரணமாய் நீங்கள் இங்கே புலம்புவது போல் என்னிடமோ, சிவக்குமாரிடமோ நீங்கள் கேள்வி எதுவும் கேட்கவில்லை. மேலும் அவர் சொல்வதும் நான் சொல்வதும் ஒன்று அல்ல. நீர்தான் அதை கூட்டணி என்று திரிக்கிறீர். நீங்கள் கேட்ட பத்து பைசா பெறாத கேள்விகள் மாலனிடமும், வாசுகி, சரஸ்வதியிடமும்தான் என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். ஆனாலும் கூட அதற்கு நான் பதிஉல் சொல்லியுல்ளேன். நான் உங்கள் மீது வைத்த விமர்சனம் எளிமையானது. குஷ்பு மீதான தாக்குதலை நியாப்படுத்துகிரீர்கள். எப்படி என்பதை தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். உங்கள் பதிவிலிருந்து மேற்கோள் காட்டியபின் உங்களுக்கு ஆதரவாய் வந்த பெயரிலியும் சுமுவும், கார்திக்கும் கூட பதில் சொல்ல முடியவில்லை. குஷ்பு மீதானா தாக்குதலுக்கு தங்கர் மீது நடந்த விசாரணைதான் காரணம் என்று சொல்லுவது, குஷ்பு மீதானா தாக்குதலை நியாயபடுத்துவது என்று அல்லாமல் வேறு என்ன?

உங்களுக்கு மிகவும் நெருங்கிய அன்புக்குரிய(அற்பமாய் கோபப்படுவதில் அர்த்தமில்லை. எல்லாவற்ரையும் தன் நிலையில் வைத்து பார்க்கும் போதுதான் சில நியாயங்கள் சிலருக்கு புரியக்கூடும், அதனால் சொல்கிறேன்) பெண் ஒருவரை, மேலதிகாரி வேலைக்கான சம்பளத்தை கேட்டதற்காக 'விபச்சாரி' என்று திட்டுகிறார். அதை இப்போது தங்கருக்கு நீங்கள் அளிக்கும் சலுகையை போல் அந்த அதிகாரியின் தனிப்பட்ட கருத்தாய் பார்ப்பீர்களா? இல்லை நடிகையை பற்றி மட்டும் அப்படி சொல்வது ஒரு தனிப்பட்ட கருத்து, அதை சொல்ல ஒருவருக்கு உரிமை உண்டு என்று நீங்கள் நினைத்தால் அதற்கான மார்க்சிய விளக்கத்தை தர இயலுமா? அந்த மேலதிகாரி மேல் விசாரணை அது இதென்று நீங்கள் ஆட்டம் ஆடிய பின், சில மாதம் கழித்து உங்களின் அன்புக்குரிய பெண் ஈபிடபிள்யூவில் பாலியல் குறித்து ஒரு கட்டுரை எழுத, அதை தனது அரசியல் பலம் கொண்டு பெரிதாக்கி, அவரை பற்றி தெரிவெங்கும் ஆபாச போஸ்டர் அடிக்க படுகிறது. செருப்பு விளக்கமார் சகிதம் ஊரை விட்டு ஒடிப்போ என்று தெருவில் தர்ணா நடக்கிறது. பத்திரிகைகளில் ஆபாசமாய் திட்டப் பட்டு, ஆதரிக்க ஆளேயில்லை என்று ஒரு நிலைவருகிறது. அம்மணியின் தொழிலும்(ஆஃபிஸ் வேலையைத்தான் சொல்கிறேன்) பாதிக்க கூடும் என்று அஞ்சி மன்னிப்பு கேட்கிறார். அப்போதும் முதலில் நடந்த ச்ம்பவத்திற்கான எதிர்வினைதான் இது என்று கூசாமல் சொல்வீர்களா? மன்னிப்பு கேட்ட உறுதியின்மை குறித்து பேசுவீர்களா? இல்லை இந்த உதாரணம் குஷ்பு உதாரணத்திலிருந்து எப்படி வேறுபடுகிரது என்று விளக்க முடியுமா?நான் சொன்ன குற்றச்சாட்டிற்கு பதில் சொல்லாமல் இப்படி தயா தக்கா என்று குதிக்கவும், குதித்துவிட்டு மனசட்சியே இல்லாமல் அறிவுவிவாதம் பற்றி பேச உங்களுக்கு வெட்கமாக இல்லை?

நான் உங்கள் கருத்துக்களை ஆரம்ப காலத்திலிருந்து விமர்சித்திருக்கிறேன். பலமுறை ஒரே அரசியல் தளத்தில் இருப்பதால் மௌனமாய் இருந்ததும், அதரவு அளித்ததும் உண்மை. ஆனாலும் பலமுறை உங்கள் பார்வைக்கும் ஜெயமோகனின் பார்வைக்கும் வித்தியாசம் இல்லாமல் இருப்பதையும் சொல்லியிருக்கிறேன். இப்போது எந்த தனிப்பட்ட விரொதமும் கிடையாது. ஒரு பெண்மீதான தாக்குதலை நியாயப்படுத்தியதால் வந்த கோபம் மட்டுமே உண்டு. எஸ்.வி. ராஜதுரை ஞாநி, ராஜன்குறை, அ.மார்க்ஸ், எம். எஸ். எஸ். பாண்டியன் என்று அனைவரும் இதை கண்டித்து குஷ்புவிற்கு பரிந்தே பேசியுள்ளனர். நீங்கள் இப்படி எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்காததால் வந்த கோபத்தை தவிர எனக்கு வேறு எந்த விரோதமும் கிடையாது.

இல்லை குஷ்பு மீதான தாக்குதலை கண்டித்துதான் அந்த பதிவை எழுதினீர்கள் என்றால் அதை கூசாமல் சொல்லி பாருங்கள்."அவர் தங்கர் பச்சான் கூறியதை எதிர்த்து சரி என்றால் அவர் கூறியதை சிலர் எதிர்ப்பதும் சரிதான் என்று சொல்ல வேண்டும். " என்று சொல்வதும், குஷ்புவிற்கு தாலி சென்டிமெண்ட் படங்களில் நடித்ததால் பாலியல் பற்றி பேச தார்மீக உரிமை என்றும், அவர் மன்னிப்பு கேட்டதை ஒரு தாக்குதல் நடக்கும்போது குற்ரம் சொல்வதும் நியாயப்படுத்துதல் இல்லை என்ம்றாலு எப்படி என்று சொல்லி மறுக்க முடியுமா? சும்மா மொட்டையாக 'நான் நியாயப்படுத்தவில்லை' என்றால் அது பதில் ஆகாது. நான் கேட்ட விஷய்ங்கள் இப்படியிருக்க அதை சிவக்குமார் எழுதியதுடன் சேர்த்து காக்க்காய் எச்ச்ங்களாய் போட்டு செல்வதில் என்ன அர்த்தம்?

நீங்கள்தான் சிவக்குமாருடன் பலமுறை குலாவினீர்கள் என்பதும், நான் தொடர்ந்து அவரை எதிர்த்து வருவதையும். இந்த விவகாரத்தில் கூட அவரை ஆதரிக்கவில்லை (அதே நேரம் காரணமில்லாமல் எதிர்க்கவும் முடியாது) மாறாக விம்ர்சனத்துடனேயே எழுதியிருக்கிறேன் என்பதும் மற்றவ்ருக்கு மட்டுமில்லாமல் உமக்கும் புரியும். அப்படியிருக்க நான் கூட்டணி வைத்ததாய் கூசாமால் திரிக்கிறீர்களே, எப்படி அய்யா அறிவார்ந்த விவாதம் சாத்தியமாகும்?

நான் பதில் சொன்னால் அது மிக நேரடியாக எதிராளியின் ஒவ்வொரு தர்க்கத்தையும் எத்கிர்கொண்டு, குறிப்பாய் ச்னக்கடம் தரும் கேள்விகளை எதிர்கொண்டு இருக்கும். உங்கள் பதிவிற்கு பதிலளிக்கும் அளவிற்கு அதில் சத்து எதுவுமே இல்லாவிட்டாலும்ன்,. வேறு காரணக்களுக்காக பதில் எழுதுவேன். இப்போது இவ்வளவுதான் முடியும்.

two more points I will write after few hours!

10/19/2005 5:13 PM  
Blogger PKS said...

ரோசா,

ரவிக்கு நீங்கள் எழுதியுள்ள இந்தப் பதிலில் ஓரே ஒரு சின்ன நெருடலைத் தவிர எனக்குப் பிரச்னை பெரிதாக இல்லை. ரவி போன்றவர்கள் முன்னால் எப்படி எழுதினார்கள், இப்போது எப்படிப் பேசுகிறார்கள் என்பதையெல்லாம் உங்களைப் போல Studious ஆக எடுத்துப் போட்டு அவரிடம் பேசுகிற சிரத்தையோ, ஆர்வமோ எனக்கு இல்லை. தான் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசுகிறவரிடம் இதையெல்லாம் எடுத்துப் போடுவதில் பிரயோசனமில்லை என்பது என் சோம்பேறித்தனத்துக்கு நான் சொல்லிக் கொள்கிற காரணம் என்றாலும், நீங்கள் இப்படி எடுத்துப் போட்டு விரிவாக எழுதுவது குறித்து எனக்குப் பிரச்னையுமில்லை. உங்களுக்கும் எனக்குமான கருத்து வேறுபாடுகள் அனைவரும் அறிந்ததே. ஆனால், ஏதோ ஒரு பிரச்னையில் எல்லாரும் ஒத்த கருத்து கொண்டிருக்கலாம் என்ற அடிப்படையை அறியாமல், ஒத்த கருத்தை எழுதியவுடன் அதைக் கூட்டணி என்றும் சந்தர்ப்பவாதம் என்றும் திரிக்கிற சிந்திக்கத் தெரியாதவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. கம்யூனிஸ்ட்டுகளை அப்படி எதிர்த்து எழுதிய பெரியார்தான், கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டபோது அதை எதிர்த்துக் குரல் கொடுத்தவர். சொல்லப்போனால், அதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்த அல்லது குரல் கொடுத்த ஒரே ஆள் பெரியார்தான். நல்லவேளை, பெரியார் காலத்தில் அதை நல்லபடியாகப் பார்க்கிற சிந்தனை மக்களுக்கு இருந்தது. இதெல்லாம் தெரிந்தால், பெரியாரைக் கூட சந்தர்ப்பவாதி என்று சிலர் இப்போது எழுதக் கூடும். :-) இவர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது. தனிமனித விருப்பு வெறுப்புகளில் சிக்குண்டுபோய், ஒருவரின் கருத்தை எதிர்ப்பது அந்த ஆளை வெறுப்பது என்ற அளவில் இவர்களிடம் திரிந்து போயிருக்கிறது. (என் விஷயத்தில் இதே மனோபாவம் உங்களிடமும் உண்டு. அதுபற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை.) பெரியாரிடமிருந்து கொள்கையை மட்டுமில்லை, தனிமனித மேன்மைகளைக் கூட இவர்கள் கற்றுக் கொள்ளவில்லை என்று விட்டுவிட வேண்டியதுதான்.

சரி, எனக்கு நெருடல் என்று சொன்னேனே, அதற்கு வருகிறேன். ரவி ஸ்ரீனிவாஸ் என்னுடன் கொஞ்சிக் குலாவ எல்லாம் இல்லை. இப்படி நீங்கள் எழுதியது சற்று அதிகம் என்றே நினைக்கிறேன். அவர்தான் உங்களையும் என்னையும் சேர்த்து உளறுகிறார் என்றால் நீங்களுமா? ரவிக்கு வலைப்பதிவில் எழுத்துருக்கள் தெரியாதபோது, நான் என்னால் இயன்ற சிறு உதவி செய்தேன். அவ்வளவுதான். உங்களுக்கு மேகிண்டாஷ் பற்றி ஸ்ரீகாந்த் மீனாட்சிக்குத் தெரியும் என்று சொன்னேனே. அதுபோல. இப்படிப்பட்ட உதவியை என்னாலியன்றால் எல்லாருக்கும் நான் செய்ய முயல்வேன்.

மற்றபடிக்கு - கருத்து வேறுபாடுகளை மீறி அனைவருடனும் நட்பு பாராட்ட வேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. அந்த விதத்திலே, ரவி, நீங்கள் அல்லது இன்னும் வேறுயார் என்றாலும் எல்லாரும் எனக்கு ஒன்றுதான். மோசமாக எதிர்த்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் குழி பறித்துக் கொள்ளும் அரசியல்வாதிகளே நேரில் சந்திக்கும்போதும் பொதுவாழ்க்கையிலும் சகஜமாக பழகுகிறார்கள் என்னும்போது, கருத்து மோதல்கள் மட்டுமே உள்ள மற்றவர்கள் ஏன் அப்படிப் பழகக் கூடாது என்பது என் எண்ணம். எனவே, ரவி என்னுடன் கொஞ்சிக் குலவ எல்லாம் இல்லை. அவர் நட்புரீதியில் எழுதிய சில மடல்களுக்கு அதே ரீதியில் பதில் சொல்லியிருக்கிறேன். சுனாமி பற்றிய கூட்டுப்பதிவை ஆரம்பித்துவிட்டு, நீங்கள் எழுதியபோதும், உங்களுக்கும் அதே மாதிரி பதில் தந்தேனே.

ரவியின் பிரச்னை - யாரிடமும் கொஞ்சிக் குலவுவது அல்ல. அப்படிக் கொஞ்சிக் குலவினாலாவது, அடுத்தவன் நியாயத்தை ஏற்றுக் கொள்ளாவிடினும் புரிந்து கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். :-) அவர் பிரச்னை, தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும். மற்றவர்கள் எழுதுவது எல்லாம் முழுமையில்லை அல்லது தவறு என்று நினைத்துக் கொண்டிருப்பது. ஆனால், அதற்காக, அவர் என்னிடம் சமரசம் செய்து கொண்டார் என்று சொல்வது சரியில்லை. தனிப்பட்ட முறையில் பழகுவதற்கு ரவி இனிய நண்பர். அவர்மீது சமரசம் செய்து கொண்டார், கொஞ்சிக் குலவினார் என்று சொல்வது எனக்கு உடன்பாடில்லை - அவர் அப்படி உளறினாலும். அப்புறம் அவருக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

ரவியை மட்டுமில்லை, உங்களைச் சந்திக்க நேர்ந்தாலும், அல்லது வேறு எவரைச் சந்திக்க நேர்ந்தாலும் கொள்கைகளைத் தள்ளிவைத்துவிட்டு, மனிதமும் நட்பும் பாராட்டுகிற மனிதனாக இருக்கவே நான் முயல்வேன். என்னை அறிந்தவர் இதை அறிவர்.

அன்புடன், பி.கே. சிவகுமார்

10/19/2005 8:48 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter