ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, January 06, 2006

மெய்களாலானது!

பொருளும் சொல்லும்
சொல் தரும் பொருளும்
அறிவும் மொழியும்
மொழியறிவும்
தகவலும் செய்தியும்
எல்லா பலகைகளும்
எல்லா எழுதுகோல்களும்
அமர்த்திக் கொண்டதென தெளிந்து,
விதையும் சாறும்
கையும்
சுயம்புவெனக் கருதி
எழுதியதையே
மீண்டும் மீண்டும் எழுதியெழுதி
திரும்ப திரும்ப வாசித்து தேடினேன்.
கண்ணும் பார்வையும்
என்ன வென்று
குத்திட்டு நின்றது
?.
தெரிவதையே பார்கிறேன்,
பார்த்து அடைவதே
அறிவு என
இன்று தெளிந்தாலும்,
அவள் அகழ்ந்தெடுக்க நேர்ந்தால்,
சூரிய ஒளி நிஜம் காட்டுமா?
இடைப்படும் நீர்தான் கலை சேர்குமா?

Post a Comment

4 Comments:

Blogger இளங்கோ-டிசே said...

வசந்த்,
புதுவருடத்தில் கவிதையோடு வந்திருக்கின்றீர்கள். வாழ்வதும், எழுதுவதும், பேசுவதும்.... எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு கேள்விக்குறிதான் இறுதியில் தொங்கிக்கொண்டிருக்கும் என்று நானும் நினைக்கின்றேன்.
.....
புத்தாண்டு வாழ்த்து.

1/06/2006 11:53 PM  
Blogger நண்பன் said...

என்ன தான்
என்னைத் தோண்டி
எத்தனை தான்
எடுத்துக் கொள்ள
முனைந்தாலும்

அடுக்கடுக்கான
பாறைப்பிளவுகளில்
கசிந்து வழியும் சிற்றூத்தில்
சூரியன் விழுந்து தெறிக்குமொளியில்
அகழ்ந்தெடுக்கும்
அவளுக்கும் கொஞ்சம்
தெளிவு கிடைக்கும்

கலை சேராத நீரானாலும்
கைகொண்டு
அள்ளிப் பருகி சுவைத்து
தாகம் தணிக்கப் போதும் -
ஆழ ஆழத்திற்கு என்னுள்
பயணம் செய்ய
அவள் தயாரானால்.
###

நல்ல கவிதை ரோஸா.

தன்னைத் தோண்டி அகழ்ந்தெடுத்துப் பார்க்கும் பார்வை தொடரட்டும்.

புத்தாண்டு வாழ்த்துகள்.

அன்புடன்
நண்பன்.

1/07/2006 12:15 AM  
Blogger SnackDragon said...

//சூரிய ஒளி நிஜம் காட்டுமா?
இடைப்படும் நீர்தான் கலை சேர்குமா? //
பிடித்துள்ளது.

1/07/2006 2:19 AM  
Blogger ROSAVASANTH said...

டீஜே, நண்பன், கார்திக் மிக்க நன்றி.

அனைவருக்கும் (தாமதமான) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மயிலாடுதுரை சிவாவை சந்தித்து, ஒரு மாலையை அவருடன் நாரயணன் மற்றும் சரவணணுடன் செலவழிக்க முடிந்தது மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.

1/08/2006 7:10 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter